ஜனாதிபதி தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாக உள்ளதாக மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
நேற்றையதினம்(11) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
அதேவேளை, ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார்.
இவ்வாறான பின்னணியில் நாட்டு மக்களின் கவனத்தை திசைதிருப்பவே எதிர்க்கட்சியினர் இந்த பிரேரணையை கொண்டு வந்துள்ளனர்.
அதேவேளை,ஜனாதிபதி தேர்தலை பிற்போட அமைச்சரவை எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை. ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் அரசியலமைப்பின் ஏற்பாடுகளில் காணப்படும் சிக்கலை தீர்ப்பதற்காகவே யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி உறுதி- அமைச்சர் காஞ்சன தெரிவிப்பு ஜனாதிபதி தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாக உள்ளதாக மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.நேற்றையதினம்(11) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார்.அதேவேளை, ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார்.இவ்வாறான பின்னணியில் நாட்டு மக்களின் கவனத்தை திசைதிருப்பவே எதிர்க்கட்சியினர் இந்த பிரேரணையை கொண்டு வந்துள்ளனர்.அதேவேளை,ஜனாதிபதி தேர்தலை பிற்போட அமைச்சரவை எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை. ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் அரசியலமைப்பின் ஏற்பாடுகளில் காணப்படும் சிக்கலை தீர்ப்பதற்காகவே யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.