• Nov 24 2024

மீனவர் பிரச்சனை தொடர்பில் இந்தியாவுடன் ஜனாதிபதி பேச வேண்டும்- கிராமிய கடற்றொழில் அமைப்புக்கள் கோரிக்கை..!

Sharmi / Sep 25th 2024, 3:52 pm
image

இந்தியா செல்ல உள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்தியா எல்லை தாண்டிய மீனவர்கள் தொடர்பில் பேச வேண்டும் என யாழ் மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் செல்லத்துரை நற்குணம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் இன்று(25)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியா எல்லை தாண்டிய மீனவர்களின் வருகையினால் வடபகுதி மீனவர்கள் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

கடந்த அரசாங்கத்தில் மீனவ சமூகம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க இந்தியா மீனவர்களின் அத்துமீறல் ஓரளவேனும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் புதிய ஜனாதிபதி அநுரகுமார பதவி ஏற்றுள்ள நிலையில் எமது மீனவர்கள் பிரச்சனை தொடர்பில் இந்தியா பிரதமருடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி நிரந்தர தீர்வினை பெற்றுத்தர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அத்தோடு வட மாகாணத்தில் இடம்பெறும் உள்ளூர் சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுத்த நிறுத்துவதோடு சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

ஆகவே, எல்லை தாண்டிய இந்திய மீனவர்களினால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வரும் வடபகுதி மீனவர்களின் பிரச்சனைகள் தொடர்பில் புதிய ஜனாதிபதி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மீனவர் பிரச்சனை தொடர்பில் இந்தியாவுடன் ஜனாதிபதி பேச வேண்டும்- கிராமிய கடற்றொழில் அமைப்புக்கள் கோரிக்கை. இந்தியா செல்ல உள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்தியா எல்லை தாண்டிய மீனவர்கள் தொடர்பில் பேச வேண்டும் என யாழ் மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் செல்லத்துரை நற்குணம் கோரிக்கை விடுத்துள்ளார்.யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் இன்று(25)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியா எல்லை தாண்டிய மீனவர்களின் வருகையினால் வடபகுதி மீனவர்கள் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். கடந்த அரசாங்கத்தில் மீனவ சமூகம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க இந்தியா மீனவர்களின் அத்துமீறல் ஓரளவேனும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் புதிய ஜனாதிபதி அநுரகுமார பதவி ஏற்றுள்ள நிலையில் எமது மீனவர்கள் பிரச்சனை தொடர்பில் இந்தியா பிரதமருடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி நிரந்தர தீர்வினை பெற்றுத்தர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அத்தோடு வட மாகாணத்தில் இடம்பெறும் உள்ளூர் சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுத்த நிறுத்துவதோடு சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். ஆகவே, எல்லை தாண்டிய இந்திய மீனவர்களினால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வரும் வடபகுதி மீனவர்களின் பிரச்சனைகள் தொடர்பில் புதிய ஜனாதிபதி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement