ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அமெரிக்க விஜயத்தை அடுத்து நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று இரவு அமெரிக்கா நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காகவே அவர் நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்த விஜயத்தின் போது நாளை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் அவர் உரையாற்ற உள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்பார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டுவேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் பயணித்துள்ளார்.
அதன்படி ஜனாதிபதியின் கீழ் உள்ள நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கான பதில் அமைச்சராக அனில் ஜயந்த பெர்ணான்டோவும், டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சராக எரங்க வீரரத்னவும், பாதுகாப்பு பதில் அமைச்சராக அருண ஜயசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் ஜனாதிபதியுடன் அமெரிக்க விஜயத்தில் பங்கேற்றுள்ள வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பதவி வகிக்கும் வௌிவிவகாரம், வௌிநாட்டு அலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சராக அருண் ஹேமச்சந்திரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா பயணமானார் ஜனாதிபதி - 4 பதில் அமைச்சர்கள் நியமனம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அமெரிக்க விஜயத்தை அடுத்து நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று இரவு அமெரிக்கா நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காகவே அவர் நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இந்த விஜயத்தின் போது நாளை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் அவர் உரையாற்ற உள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்பார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டுவேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் பயணித்துள்ளார். அதன்படி ஜனாதிபதியின் கீழ் உள்ள நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கான பதில் அமைச்சராக அனில் ஜயந்த பெர்ணான்டோவும், டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சராக எரங்க வீரரத்னவும், பாதுகாப்பு பதில் அமைச்சராக அருண ஜயசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் ஜனாதிபதியுடன் அமெரிக்க விஜயத்தில் பங்கேற்றுள்ள வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பதவி வகிக்கும் வௌிவிவகாரம், வௌிநாட்டு அலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சராக அருண் ஹேமச்சந்திரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.