• Sep 17 2024

ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க நேரிடும்..! - முன்னாள் அமைச்சர் பரபரப்புத் தகவல்

Chithra / Jul 22nd 2024, 12:46 pm
image

Advertisement

 

22 ஆம் அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் பட்சத்தில் அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் நிறைவேற்ற முடியாது போனால் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க நேரிடும்  என முன்னாள் அமைச்சர் சன்னஜயசுமன தெரிவித்துள்ளார்.

நொச்சியாகம பிரதேசத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இதனைத்  தெரிவித்தார்.

22 ஆம் திருத்தம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டால் அதாவது மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால் அது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பு வெளியிடப்படும்.

உயர் நீதிமன்றத்தின் பரிசீலனையின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 6 வருடங்களில் இருந்து 5 வருடங்களாக குறைப்பதற்கு மக்கள் கருத்துக்கணிப்பு கோரப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் பரிந்துரை முன்வைத்தால் ஜனாதிபதி அதற்கு ஏதேனும் சூழ்ச்சிகளை மேற்கொள்வார்.

மறுபுறம் 22 ஆம் திருத்தத்தை நாடாளுமன்றில் 3 இல் 2 பெரும்பான்மையினால் நிறைவேற்ற முடியாது போனால் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான சாத்தியம் உள்ளது.

தற்போதைய நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை தற்போது அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் விரும்பமாட்டார்கள்  என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க நேரிடும். - முன்னாள் அமைச்சர் பரபரப்புத் தகவல்  22 ஆம் அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் பட்சத்தில் அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் நிறைவேற்ற முடியாது போனால் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க நேரிடும்  என முன்னாள் அமைச்சர் சன்னஜயசுமன தெரிவித்துள்ளார்.நொச்சியாகம பிரதேசத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இதனைத்  தெரிவித்தார்.22 ஆம் திருத்தம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டால் அதாவது மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால் அது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பு வெளியிடப்படும்.உயர் நீதிமன்றத்தின் பரிசீலனையின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 6 வருடங்களில் இருந்து 5 வருடங்களாக குறைப்பதற்கு மக்கள் கருத்துக்கணிப்பு கோரப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் பரிந்துரை முன்வைத்தால் ஜனாதிபதி அதற்கு ஏதேனும் சூழ்ச்சிகளை மேற்கொள்வார்.மறுபுறம் 22 ஆம் திருத்தத்தை நாடாளுமன்றில் 3 இல் 2 பெரும்பான்மையினால் நிறைவேற்ற முடியாது போனால் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான சாத்தியம் உள்ளது.தற்போதைய நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை தற்போது அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் விரும்பமாட்டார்கள்  என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement