• May 17 2024

தொடர்ந்து பயன்படுத்தப்படும் பயங்கரவாத தடைச்சட்டம்..! - அமெரிக்க தூதுவர் வெளியிட்ட அதிரடிக் கருத்து samugammedia

Chithra / Dec 1st 2023, 11:39 am
image

Advertisement


பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதாக வெளியாகும் தகவல்கள் கரிசனையளிக்கின்றன என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

அமைதியான வழியில் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் கைதுசெய்யப்படுவது, சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் நடத்தப்படும் விதம் உட்பட,

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது குறித்து தகவல்கள் கிடைப்பது கரிசனையை ஏற்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து சுதந்திரத்தையும், தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் மனிதாபிமான ரீதியில் நடத்தப்படுவதையும் உறுதிப்படுத்துவது அவசியம் .

குறிப்பாக அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை அகற்றி விட்டு புதிய சட்டத்தை கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தருணத்தில் அது அடிப்படை சுதந்திரத்தை  பாதுகாக்கவேண்டும் எனவும் ஜூலிசங் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பயன்படுத்தப்படும் பயங்கரவாத தடைச்சட்டம். - அமெரிக்க தூதுவர் வெளியிட்ட அதிரடிக் கருத்து samugammedia பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதாக வெளியாகும் தகவல்கள் கரிசனையளிக்கின்றன என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.அமைதியான வழியில் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் கைதுசெய்யப்படுவது, சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் நடத்தப்படும் விதம் உட்பட,பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது குறித்து தகவல்கள் கிடைப்பது கரிசனையை ஏற்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.கருத்து சுதந்திரத்தையும், தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் மனிதாபிமான ரீதியில் நடத்தப்படுவதையும் உறுதிப்படுத்துவது அவசியம் .குறிப்பாக அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை அகற்றி விட்டு புதிய சட்டத்தை கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தருணத்தில் அது அடிப்படை சுதந்திரத்தை  பாதுகாக்கவேண்டும் எனவும் ஜூலிசங் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement