• Sep 19 2024

நாட்டில் திடீரென உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை..! துறைசார் வல்லுநர்கள் விளக்கம்..!

Sharmi / Aug 1st 2024, 1:26 pm
image

Advertisement

நாட்டில் தங்கத்தின் விலையானது நேற்றுடன்(31) ஒப்பிடுகையில் 24 கரட் தங்கத்தின் விலை 1000 ரூபாவால் இன்றையதினம்(01) அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனடிப்படையில், நேற்றைய தினம் (31) 197,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கம், இன்றைய தினம் (01) 198,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அதேவேளை, நேற்றைய தினம் 181,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 22 கரட் தங்கம், இன்றைய தினம் 181,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், சர்வதேச அரசியல் மற்றும் வர்த்தக நிலைமை ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ள பின்னணியிலேயே, தங்க விலை அதிகரிப்பதாக துறைசார் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் திடீரென உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை. துறைசார் வல்லுநர்கள் விளக்கம். நாட்டில் தங்கத்தின் விலையானது நேற்றுடன்(31) ஒப்பிடுகையில் 24 கரட் தங்கத்தின் விலை 1000 ரூபாவால் இன்றையதினம்(01) அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.அதனடிப்படையில், நேற்றைய தினம் (31) 197,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கம், இன்றைய தினம் (01) 198,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.அதேவேளை, நேற்றைய தினம் 181,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 22 கரட் தங்கம், இன்றைய தினம் 181,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், சர்வதேச அரசியல் மற்றும் வர்த்தக நிலைமை ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ள பின்னணியிலேயே, தங்க விலை அதிகரிப்பதாக துறைசார் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement