• Nov 24 2024

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கிடைத்த கொள்ளை இலாபம்..!

Chithra / Jan 5th 2024, 10:23 am
image

இலங்கை பெற்றோலிய  கூட்டுத்தாபனம் 2023 ஆம் ஆண்டில் சுமார் 120 பில்லியன் ரூபா இலாப பங்கினைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2023ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்திற்குள் நாட்டின் எரிபொருள் நுகர்வு 50 வீதத்தால் குறைந்துள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் கூறினாலும் அதிக லாபத்தை பதிவு செய்துள்ளது. 

சீன எரிபொருள் நிறுவனங்களான சினோபெக் நிறுவனத்துடனான போட்டியை குறைப்பதால் கனிம எண்ணெய் கழகத்தின் லாபம் ஆபத்தான நிலையில் இருப்பதாக சில தரப்பினர் கூறுவதில் உண்மை இல்லை என்றும் கூறப்படுகின்றது.

எனவே இதனை தனியார் மயமாக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், ஈவுத்தொகையை மேலும் அதிகரிப்பதன் மூலம் எதிர்கால இலக்குகளை எட்டுவதற்கு தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் போனஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கிடைத்த கொள்ளை இலாபம். இலங்கை பெற்றோலிய  கூட்டுத்தாபனம் 2023 ஆம் ஆண்டில் சுமார் 120 பில்லியன் ரூபா இலாப பங்கினைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.2023ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்திற்குள் நாட்டின் எரிபொருள் நுகர்வு 50 வீதத்தால் குறைந்துள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் கூறினாலும் அதிக லாபத்தை பதிவு செய்துள்ளது. சீன எரிபொருள் நிறுவனங்களான சினோபெக் நிறுவனத்துடனான போட்டியை குறைப்பதால் கனிம எண்ணெய் கழகத்தின் லாபம் ஆபத்தான நிலையில் இருப்பதாக சில தரப்பினர் கூறுவதில் உண்மை இல்லை என்றும் கூறப்படுகின்றது.எனவே இதனை தனியார் மயமாக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், ஈவுத்தொகையை மேலும் அதிகரிப்பதன் மூலம் எதிர்கால இலக்குகளை எட்டுவதற்கு தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் போனஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement