• Oct 05 2024

சங்கு சின்னத்தின் வாக்குறுதி காற்றில் பறந்தது- சுகாஷ் சுட்டிக்காட்டு..!

Sharmi / Oct 4th 2024, 3:15 pm
image

Advertisement

சங்குச் சின்னம் அரசியல் பேதங்களைக் கடந்த பொதுச் சின்னமாக இருக்குமென்ற வாக்குறுதி காற்றில் பறந்து விட்டதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாங்கள் கூறியது அனைத்தும் உண்மை என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டது. சங்குச் சின்னம் தனியொரு கட்சியின் சின்னமாகியது.

எங்கள் முடிவுகள் கொள்கையின் பாற்பட்டதே தவிர மதுபான அனுமதிப்பத்திரங்களையோ வேறு சலுகைகளையோ அடிப்படையாகக் கொண்டதல்ல என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகின்றது.

அன்புக்குரிய மக்களே, நீங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தடம்மாறாத கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்திற்கு அளிக்கும் வாக்குகளே தமிழினத்தின் எதிர்கால இருப்பைத் தீர்மானிக்கும் என்பதைப் பொறுப்போடு பதிவு செய்கின்றோம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சங்கு சின்னத்தின் வாக்குறுதி காற்றில் பறந்தது- சுகாஷ் சுட்டிக்காட்டு. சங்குச் சின்னம் அரசியல் பேதங்களைக் கடந்த பொதுச் சின்னமாக இருக்குமென்ற வாக்குறுதி காற்றில் பறந்து விட்டதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.நேற்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,நாங்கள் கூறியது அனைத்தும் உண்மை என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டது. சங்குச் சின்னம் தனியொரு கட்சியின் சின்னமாகியது.எங்கள் முடிவுகள் கொள்கையின் பாற்பட்டதே தவிர மதுபான அனுமதிப்பத்திரங்களையோ வேறு சலுகைகளையோ அடிப்படையாகக் கொண்டதல்ல என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகின்றது.அன்புக்குரிய மக்களே, நீங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தடம்மாறாத கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்திற்கு அளிக்கும் வாக்குகளே தமிழினத்தின் எதிர்கால இருப்பைத் தீர்மானிக்கும் என்பதைப் பொறுப்போடு பதிவு செய்கின்றோம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement