• Nov 26 2024

மக்களை ஒடுக்கு முறைக்குள் வைத்திருக்கும் நோக்குடன் கொண்டுவரப்பட்டதே நிகழ்நிலை காப்பு சட்டம்...! அருண் ஹேமச்சந்திரா குற்றச்சாட்டு...!samugammedia

Sharmi / Feb 16th 2024, 9:27 am
image

மக்களை  ஒடுக்கு முறைக்குள் வைத்திருக்கும் நோக்குடன் நிகழ்நிலை காப்பு சட்டம் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினரும்,மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட தலைவருமான அருன் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.

திருகோணமலையில் நேற்றையதினம்(15) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய கால கட்டத்தில் நிகழ்நிலை காப்பு சட்டம் மிகவும் பேசுபொருளாக காணப்படுகின்றது.

பல்வேறுபட்ட  மக்களின் எதிர்ப்புகளை சம்பாதித்து வரும் இந்த அரசாங்கமானது தொடர்ந்தும் மக்களை ஒடுக்கி வருகின்றது.

ஒடுக்கு முறையின் ஒரு அம்சமாக இந்த நிகழ்நிலை காப்புச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம் செய்யப்பட்டு அமுலில் இருக்கின்றது.

உலகத்தில் பல்வேறு தரப்பட்ட நாடுகளில் இவ்வாறான சட்ட திட்டங்கள் இருக்கின்றன.  இதன் அடிப்படையில் இலங்கைக்கு இவ்வாரண சட்ட திட்டங்கள் தேவை என்கின்ற விடயத்தினை இந்த அரசாங்கம் கூறி வந்தாலும் ஏனைய நாடுகளில் மக்களது கருத்து கணிப்புகளை  சரியான வகையில் செவிமடுத்து மக்களது  ஆலோசனையின் அடிப்படையிலேயே தான் இவ்வாறான சட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

ரணில்,ராஜபக்ஷவின் இந்த அரசாங்கம் மிகவும் அவசரமாக இந்த சட்ட திட்டங்களை நிறைவேற்றியமை தொடர்பாக பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் அவர் இதன் போதும் சுட்டிக்காட்டினார்.

மேலும், எதிர்காலத்தில் தேர்தல் பிரச்சாரங்களை இலகுவாக கொண்டு செல்வதற்கும், மக்களுடைய கருத்துக்களை ஒடுக்குவதற்காகவும், உண்மையான கருத்துக்களை மற்றவர்களுக்கு தெரிந்து கொள்ளும் நோக்கில்  தெரிவிப்பதை தவிர்த்துக் கொள்வதற்கும் இவ்வாறான சட்ட திட்டங்கள் மூலமாக இவர் இதனை செய்ய முயல்வாறானால் பாரிய எதிர்ப்பு சமுதாயத்தில் இருந்து எழும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

மக்களை ஒடுக்கு முறைக்குள் வைத்திருக்கும் நோக்குடன் கொண்டுவரப்பட்டதே நிகழ்நிலை காப்பு சட்டம். அருண் ஹேமச்சந்திரா குற்றச்சாட்டு.samugammedia மக்களை  ஒடுக்கு முறைக்குள் வைத்திருக்கும் நோக்குடன் நிகழ்நிலை காப்பு சட்டம் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினரும்,மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட தலைவருமான அருன் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.திருகோணமலையில் நேற்றையதினம்(15) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய கால கட்டத்தில் நிகழ்நிலை காப்பு சட்டம் மிகவும் பேசுபொருளாக காணப்படுகின்றது.பல்வேறுபட்ட  மக்களின் எதிர்ப்புகளை சம்பாதித்து வரும் இந்த அரசாங்கமானது தொடர்ந்தும் மக்களை ஒடுக்கி வருகின்றது.ஒடுக்கு முறையின் ஒரு அம்சமாக இந்த நிகழ்நிலை காப்புச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம் செய்யப்பட்டு அமுலில் இருக்கின்றது.உலகத்தில் பல்வேறு தரப்பட்ட நாடுகளில் இவ்வாறான சட்ட திட்டங்கள் இருக்கின்றன.  இதன் அடிப்படையில் இலங்கைக்கு இவ்வாரண சட்ட திட்டங்கள் தேவை என்கின்ற விடயத்தினை இந்த அரசாங்கம் கூறி வந்தாலும் ஏனைய நாடுகளில் மக்களது கருத்து கணிப்புகளை  சரியான வகையில் செவிமடுத்து மக்களது  ஆலோசனையின் அடிப்படையிலேயே தான் இவ்வாறான சட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.ரணில்,ராஜபக்ஷவின் இந்த அரசாங்கம் மிகவும் அவசரமாக இந்த சட்ட திட்டங்களை நிறைவேற்றியமை தொடர்பாக பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் அவர் இதன் போதும் சுட்டிக்காட்டினார்.மேலும், எதிர்காலத்தில் தேர்தல் பிரச்சாரங்களை இலகுவாக கொண்டு செல்வதற்கும், மக்களுடைய கருத்துக்களை ஒடுக்குவதற்காகவும், உண்மையான கருத்துக்களை மற்றவர்களுக்கு தெரிந்து கொள்ளும் நோக்கில்  தெரிவிப்பதை தவிர்த்துக் கொள்வதற்கும் இவ்வாறான சட்ட திட்டங்கள் மூலமாக இவர் இதனை செய்ய முயல்வாறானால் பாரிய எதிர்ப்பு சமுதாயத்தில் இருந்து எழும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement