• Nov 25 2024

கல்முனையில் தீவிரமடைந்த போராட்டம்...! திடீரென குவிக்கப்பட்ட பொலிஸார்- முடக்கப்பட்ட போக்குவரத்து...!

Sharmi / Jun 24th 2024, 4:13 pm
image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயங்களுக்கு உடனடி தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி இன்று(24)  ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமையினால் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதுடன் பதற்ற நிலை தொடர்ந்தது.

அத்துடன் பிரதேச செயலகத்தின் நுழைவாயிலையும் பூட்டிய நிலையில்  அதிகாரிகளை உள்நுழைய விடாமல் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெறும் நிர்வாக அடக்குமுறைகளை கண்டித்தும்  அதற்கான உரிய தீர்வு கோரியும்  தொடர்ச்சியாக 92 நாட்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில்  இன்று(24)   பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மட்டக்களப்பு - கல்முனை வீதி தடைப்பட்டுள்ளதால்  வாகனங்களை மாற்று வீதிகளில் அனுப்புவதற்கு பொலிஸார்  நடவடிக்கை எடுத்திருந்தனர்.

மருத்துவ சேவை வாகனங்கள் மாத்திரம் மக்களால் அனுமதிக்கப்பட்டிருந்தன.

இதேவேளை 7 மணித்தியாலங்களாக  கல்முனை நகர் போராட்டக்காரர் வசம் இருந்த நிலையில், கல்முனையில் வீதி மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு  மாவட்ட செயலாளர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

அத்துடன் தமது  நியாயமான கோரிக்கைக்கு பதில் என்ன?  என கோஷங்களை எழுப்பியவாறு வீதியில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மாவட்ட செயலாளர், பொலிஸாரின் மத்தியஸ்த்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கேட்டுக்கொண்டதற்கிணங்க  சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எட்டுப் பேர் மாவட்ட செயலகத்துக்கு பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளனர்.

அதுவரை வீதி மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு  வழமை போன்று கல்முனை வடக்கு பிரதேச  செயலகம் முன்பாக சுழற்ச்சிமுறை போராட்டம் தொடர்கிறமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வழமைக்கு மாறாக இன்று பாரிய விமானம் ஒன்று பெரும் இரைச்சலுடன் ஆகாயத்தில் வட்டமடித்த வண்ணம் இருந்ததையும் காண முடிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.




கல்முனையில் தீவிரமடைந்த போராட்டம். திடீரென குவிக்கப்பட்ட பொலிஸார்- முடக்கப்பட்ட போக்குவரத்து. கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயங்களுக்கு உடனடி தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி இன்று(24)  ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமையினால் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதுடன் பதற்ற நிலை தொடர்ந்தது.அத்துடன் பிரதேச செயலகத்தின் நுழைவாயிலையும் பூட்டிய நிலையில்  அதிகாரிகளை உள்நுழைய விடாமல் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெறும் நிர்வாக அடக்குமுறைகளை கண்டித்தும்  அதற்கான உரிய தீர்வு கோரியும்  தொடர்ச்சியாக 92 நாட்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில்  இன்று(24)   பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது.இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மட்டக்களப்பு - கல்முனை வீதி தடைப்பட்டுள்ளதால்  வாகனங்களை மாற்று வீதிகளில் அனுப்புவதற்கு பொலிஸார்  நடவடிக்கை எடுத்திருந்தனர்.மருத்துவ சேவை வாகனங்கள் மாத்திரம் மக்களால் அனுமதிக்கப்பட்டிருந்தன.இதேவேளை 7 மணித்தியாலங்களாக  கல்முனை நகர் போராட்டக்காரர் வசம் இருந்த நிலையில், கல்முனையில் வீதி மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு  மாவட்ட செயலாளர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டது.அத்துடன் தமது  நியாயமான கோரிக்கைக்கு பதில் என்ன  என கோஷங்களை எழுப்பியவாறு வீதியில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் மாவட்ட செயலாளர், பொலிஸாரின் மத்தியஸ்த்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கேட்டுக்கொண்டதற்கிணங்க  சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எட்டுப் பேர் மாவட்ட செயலகத்துக்கு பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளனர்.அதுவரை வீதி மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு  வழமை போன்று கல்முனை வடக்கு பிரதேச  செயலகம் முன்பாக சுழற்ச்சிமுறை போராட்டம் தொடர்கிறமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, வழமைக்கு மாறாக இன்று பாரிய விமானம் ஒன்று பெரும் இரைச்சலுடன் ஆகாயத்தில் வட்டமடித்த வண்ணம் இருந்ததையும் காண முடிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement