• Feb 07 2026

அவசரகால சட்டத்தின் நோக்கம் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தடுப்பதே! பொலிஸ் விளக்கம்

Chithra / Dec 8th 2025, 1:01 pm
image


அவசரகால சட்டம் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தடுப்பதற்காக மட்டுமே நோக்கம் கொண்டது என்றும், இது அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படாது என்றும் பொலிஸ் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார். 

  

பொது நலன்புரி முயற்சிகள் மற்றும் நடந்து வரும் நிவாரண நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தவறான தகவல்களை பரப்பி அச்சத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்படும்.

 

இந்த சட்டங்கள், பீதியை உண்டாக்க தகவல்தொடர்பு தளங்களைத் தவறாகப் பயன்படுத்துபவர்களை மட்டுமே குறிப்பாக இலக்கு வைக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார். 

 

இதேவேளை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, இந்த அவசரகால சட்டங்கள் கருத்து சுதந்திரத்தை அல்லது அரசாங்கத்தின் விமர்சனத்தை ஒடுக்கப் பயன்படுத்தப்படாது என்று உறுதியளித்தார். 

 

விமர்சன அல்லது பாதகமான கருத்துக்களால் தாமோ தமது நிர்வாகமோ கலக்கம் அடையவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

அவசரகால சட்டத்தின் நோக்கம் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தடுப்பதே பொலிஸ் விளக்கம் அவசரகால சட்டம் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தடுப்பதற்காக மட்டுமே நோக்கம் கொண்டது என்றும், இது அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படாது என்றும் பொலிஸ் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.   பொது நலன்புரி முயற்சிகள் மற்றும் நடந்து வரும் நிவாரண நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தவறான தகவல்களை பரப்பி அச்சத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சட்டங்கள், பீதியை உண்டாக்க தகவல்தொடர்பு தளங்களைத் தவறாகப் பயன்படுத்துபவர்களை மட்டுமே குறிப்பாக இலக்கு வைக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.  இதேவேளை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, இந்த அவசரகால சட்டங்கள் கருத்து சுதந்திரத்தை அல்லது அரசாங்கத்தின் விமர்சனத்தை ஒடுக்கப் பயன்படுத்தப்படாது என்று உறுதியளித்தார்.  விமர்சன அல்லது பாதகமான கருத்துக்களால் தாமோ தமது நிர்வாகமோ கலக்கம் அடையவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement