• Nov 19 2024

ஜெனிவாவில் பன்னாட்டு தூதுவர்களை சந்தித்த காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்..!

Sharmi / Sep 19th 2024, 8:51 am
image

நாம் பன்னாட்டு தூதுவர்களை சந்தித்து எமது நியாயங்களை எடுத்துரைக்கின்றோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவினரின் சங்கச் செயலாளர் திருமதி லீலாதேவி ஆனந்த நடராஜா தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில்  கலந்துகொள்வதற்காக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினரின் சங்க பிரதிநிதிகள் கடந்தவாரம் ஜெனீவாவுக்கு சென்று அங்கு நடைபெறும் அமர்வுகளில் பங்கேற்று வருவதுடன் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்.

அந்தவகையில் நேற்றுமுன்தினம் பன்னாட்டு தூதுவர்களுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே லீலாதேவி ஆனந்த நடராஜா இவ்வாறு தெரிவித்தார்.

அதன்படி நாம் போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து இலங்கை ஜனாதிபதி எம்மை ஏமாற்றியமையும்  உள்நாட்டு  பொறிமுறையை ஏன் நாங்கள் நிராகரிக்கின்றோம் என்பதையும் எடுத்துக் கூறினோம்.

 அதே போல ஒ.எம்.பி எவ்வாறு உருவாக்கப்பட்டது.அது எமது விருப்பத்திற்கு மாறாக எவ்வாறு இயங்க தொடங்கியது.அதற்கு எதிர்ப்பு தெரிவித்தமை, விண்ணப்பங்கள் கொடுத்தும் இன்னும் பதில் கூறாமல் இருப்பது, அதை விட ஒ.எம்.பி க்குள் வஞ்சகத்தனமாக மக்களை உள் வாங்கிக் கொண்டிருப்பது தொடர்பாகவும் சகல நாட்டு பிரதிநிதிகளுக்கும் விளக்கிக் கொண்டிருக்கின்றோம்.

மேலும் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான பொறிமுறை தொடர்பாகவும் அதை ஏன் நாங்கள் மறுதலிக்கின்றோம்? என்பதையும் ஏற்கனவே எமக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள், காணி அபகரிப்புகலாசார புரள்வுகளுக்குரிய படையினரின் ஊக்குவிப்பு மற்றும்  சைவ கோயில்களை அழித்து பௌத்த விகாரைகளை அமைப்பதால் எமக்குரிய வழிபாட்டு சுதந்திரம் மறுக்கப்படுவது தொடர்பாகவும் குறித்த பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டி வருகின்றோம்.

நேற்றையதினம் அவுஸ்ரேலிய நாட்டின் பிரதியுடன் உரையாடியிருந்தோம்.

அத்துடன் 29 காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளின் கையேடுகள் கொடுத்து அதற்குரிய விளக்கங்களை அளித்து அவர்களை கண்டுபிடிப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வந்துள்ளோம். என்கிறார்.



ஜெனிவாவில் பன்னாட்டு தூதுவர்களை சந்தித்த காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள். நாம் பன்னாட்டு தூதுவர்களை சந்தித்து எமது நியாயங்களை எடுத்துரைக்கின்றோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவினரின் சங்கச் செயலாளர் திருமதி லீலாதேவி ஆனந்த நடராஜா தெரிவித்தார்.ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில்  கலந்துகொள்வதற்காக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினரின் சங்க பிரதிநிதிகள் கடந்தவாரம் ஜெனீவாவுக்கு சென்று அங்கு நடைபெறும் அமர்வுகளில் பங்கேற்று வருவதுடன் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்.அந்தவகையில் நேற்றுமுன்தினம் பன்னாட்டு தூதுவர்களுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே லீலாதேவி ஆனந்த நடராஜா இவ்வாறு தெரிவித்தார்.அதன்படி நாம் போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து இலங்கை ஜனாதிபதி எம்மை ஏமாற்றியமையும்  உள்நாட்டு  பொறிமுறையை ஏன் நாங்கள் நிராகரிக்கின்றோம் என்பதையும் எடுத்துக் கூறினோம். அதே போல ஒ.எம்.பி எவ்வாறு உருவாக்கப்பட்டது.அது எமது விருப்பத்திற்கு மாறாக எவ்வாறு இயங்க தொடங்கியது.அதற்கு எதிர்ப்பு தெரிவித்தமை, விண்ணப்பங்கள் கொடுத்தும் இன்னும் பதில் கூறாமல் இருப்பது, அதை விட ஒ.எம்.பி க்குள் வஞ்சகத்தனமாக மக்களை உள் வாங்கிக் கொண்டிருப்பது தொடர்பாகவும் சகல நாட்டு பிரதிநிதிகளுக்கும் விளக்கிக் கொண்டிருக்கின்றோம்.மேலும் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான பொறிமுறை தொடர்பாகவும் அதை ஏன் நாங்கள் மறுதலிக்கின்றோம் என்பதையும் ஏற்கனவே எமக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள், காணி அபகரிப்புகலாசார புரள்வுகளுக்குரிய படையினரின் ஊக்குவிப்பு மற்றும்  சைவ கோயில்களை அழித்து பௌத்த விகாரைகளை அமைப்பதால் எமக்குரிய வழிபாட்டு சுதந்திரம் மறுக்கப்படுவது தொடர்பாகவும் குறித்த பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டி வருகின்றோம்.நேற்றையதினம் அவுஸ்ரேலிய நாட்டின் பிரதியுடன் உரையாடியிருந்தோம்.அத்துடன் 29 காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளின் கையேடுகள் கொடுத்து அதற்குரிய விளக்கங்களை அளித்து அவர்களை கண்டுபிடிப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வந்துள்ளோம். என்கிறார்.

Advertisement

Advertisement

Advertisement