பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாளை முதல் நாடாளுமன்றின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பொதுமக்கள் பார்வையிட முடியும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்
இந்த விடயம் தொடர்பில் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க கருத்துரைத்த பின்னரே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
நாட்டில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார்.
இந்த அறிக்கை சட்ட மா அதிபருக்கு அனுப்பப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் பட்டலந்தை ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை காலை விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்.
நாளை முதல் மக்கள் பார்வைக்கு வெளியாகிறது பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாளை முதல் நாடாளுமன்றின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பொதுமக்கள் பார்வையிட முடியும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார் இந்த விடயம் தொடர்பில் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க கருத்துரைத்த பின்னரே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் நாட்டில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார். இந்த அறிக்கை சட்ட மா அதிபருக்கு அனுப்பப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் பட்டலந்தை ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை காலை விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்.