• Apr 01 2025

கடற்பகுதிகளில் மீண்டும் ஏற்பட்டுள்ள ஆபத்து; அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை

Chithra / Mar 26th 2025, 4:37 pm
image

 

வௌ்ளவத்தை  - கல்கிஸை, பாணந்துறை கடற்பகுதிகளில் மீண்டும் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இதனால் பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை உயிர் காப்பு சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

அத்தோடு, முதலைகளால் ஏற்படக்கூடிய பாதிப்பை தவிர்ப்பதற்கு அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வலியுறுத்தினார்.   

மேலும், இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசங்க நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்தக் கடலோரப் பகுதிகளைப் பயன்படுத்தும் போது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கடற்பகுதிகளில் மீண்டும் ஏற்பட்டுள்ள ஆபத்து; அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை  வௌ்ளவத்தை  - கல்கிஸை, பாணந்துறை கடற்பகுதிகளில் மீண்டும் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.இதனால் பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை உயிர் காப்பு சங்கம் அறிவுறுத்தியுள்ளது.அத்தோடு, முதலைகளால் ஏற்படக்கூடிய பாதிப்பை தவிர்ப்பதற்கு அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வலியுறுத்தினார்.   மேலும், இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசங்க நாணயக்கார தெரிவித்துள்ளார்.இந்தக் கடலோரப் பகுதிகளைப் பயன்படுத்தும் போது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement