• Mar 29 2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ஞானசார தேரரிடம் அரசு விடுத்துள்ள வேண்டுகோள்

Chithra / Mar 26th 2025, 4:47 pm
image


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் அல்லது தேசிய பாதுகாப்பு தொடர்பில் முக்கிய தகவல்களை அறிந்திருந்தால் அவை தொடர்பில் புலனாய்வுப்பிரிவுக்கு அறிவிக்க வேண்டியது ஞானசார தேரரின் கடமையாகும். அதனை விடுத்து ஊடகவியலாளர் மாநாடுகளில் அவை தொடர்பில் கூறிக் கொண்டிருப்பது பொறுத்தமற்றது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புலனாய்வுத்துறையின் ஊடாக அரசாங்கம் மத அடிப்படைவாதத்தைப் பரப்பும் குழுக்கள் தொடர்பில் ஆராய்ந்து அது குறித்த தகவல்களை பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்துக்கு வெளியிலும் வெளிப்படுத்தியது. உரிய நேரத்தில் அவ்வாறானவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் அல்லது தேசிய பாதுகாப்பு தொடர்பில் முக்கிய தகவல்களை அறிந்திருந்தால் அவை தொடர்பில் புலனாய்வுப்பிரிவுக்கு அறிவிக்க வேண்டியது ஞானசார தேரரின் கடமையாகும்.

விசாரணைகள் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படுபவையல்ல. அவை பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவினாலேயே முன்னெடுக்கப்படும்.

ஞானசார தேரருக்கு புலனாய்வுப் பிரிவில் உள்ளவர்கள் யார் என்பது தெரியும். அந்த வகையில் தன்னிடமுள்ள தகவல்கள் தொடர்பில் அவரால் நேரடியாக புலனாய்வு பிரிவுக்கு தெரிவிக்க முடியும். வழங்கப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு புலனாய்வுப்பிரிவு விசாரணைகளை முன்னெடுக்கும் என்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ஞானசார தேரரிடம் அரசு விடுத்துள்ள வேண்டுகோள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் அல்லது தேசிய பாதுகாப்பு தொடர்பில் முக்கிய தகவல்களை அறிந்திருந்தால் அவை தொடர்பில் புலனாய்வுப்பிரிவுக்கு அறிவிக்க வேண்டியது ஞானசார தேரரின் கடமையாகும். அதனை விடுத்து ஊடகவியலாளர் மாநாடுகளில் அவை தொடர்பில் கூறிக் கொண்டிருப்பது பொறுத்தமற்றது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,புலனாய்வுத்துறையின் ஊடாக அரசாங்கம் மத அடிப்படைவாதத்தைப் பரப்பும் குழுக்கள் தொடர்பில் ஆராய்ந்து அது குறித்த தகவல்களை பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்துக்கு வெளியிலும் வெளிப்படுத்தியது. உரிய நேரத்தில் அவ்வாறானவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் அல்லது தேசிய பாதுகாப்பு தொடர்பில் முக்கிய தகவல்களை அறிந்திருந்தால் அவை தொடர்பில் புலனாய்வுப்பிரிவுக்கு அறிவிக்க வேண்டியது ஞானசார தேரரின் கடமையாகும்.விசாரணைகள் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படுபவையல்ல. அவை பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவினாலேயே முன்னெடுக்கப்படும்.ஞானசார தேரருக்கு புலனாய்வுப் பிரிவில் உள்ளவர்கள் யார் என்பது தெரியும். அந்த வகையில் தன்னிடமுள்ள தகவல்கள் தொடர்பில் அவரால் நேரடியாக புலனாய்வு பிரிவுக்கு தெரிவிக்க முடியும். வழங்கப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு புலனாய்வுப்பிரிவு விசாரணைகளை முன்னெடுக்கும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement