• May 10 2025

உதயமானது 'கிழக்கு தமிழர் கூட்டணி': பிள்ளையான் வியாழேந்திரன் ஒரே அணியில் சங்கமம்..!

Sharmi / Mar 15th 2025, 5:57 pm
image

கிழக்குத் தமிழர்களின் வளர்ச்சியையும் சுபிட்ஷத்தையும் கருத்தில் கொண்டு  பல்லின சிக்கல்களுக்கு முகம் கொடுக்கும் வண்ணம் பலமிக்க அரசியல் சக்தி ஒன்றினை கட்டமைக்கும்  முயற்சியின் பேறாக “கிழக்கு தமிழர் கூட்டமைப்பு” எனும் புதிய கூட்டமைப்பு இன்று(15)  உதயமானது. 

இதன் முதற்கட்டமாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிக்கும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு கைச்சாத்திடும் நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் மட்டக்களப்பிலுள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றது.

இந்த ஒற்றுமைக்கான பயணத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிழக்கை அடிப்டையாகக் கொண்டியங்கும் அரசியல் சக்திகள் அனைவரையும் ஒன்றிணைத்து போட்டியிட உள்ளதோடு எதிர்காலத்தில் பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளையும் சிவில் சமூக ஆர்வலர்களையும் ஒன்றிணைத்து அதனுடாக எதிர்காலத்தில் கிழக்குத் தமிழர்களின் அரசியல்,சமூக பாதுகாப்பு அரணாக பலம்பொருந்திய கட்டமைப்பாக இது செயல்படவுள்ளது. 

புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன்,  முற்போக்கு தமிழர் கழக செயலாளர் யோகநாதன் ரொஸ்மன் உட்பட குறித்த இரு கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உதயமானது 'கிழக்கு தமிழர் கூட்டணி': பிள்ளையான் வியாழேந்திரன் ஒரே அணியில் சங்கமம். கிழக்குத் தமிழர்களின் வளர்ச்சியையும் சுபிட்ஷத்தையும் கருத்தில் கொண்டு  பல்லின சிக்கல்களுக்கு முகம் கொடுக்கும் வண்ணம் பலமிக்க அரசியல் சக்தி ஒன்றினை கட்டமைக்கும்  முயற்சியின் பேறாக “கிழக்கு தமிழர் கூட்டமைப்பு” எனும் புதிய கூட்டமைப்பு இன்று(15)  உதயமானது. இதன் முதற்கட்டமாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிக்கும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு கைச்சாத்திடும் நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் மட்டக்களப்பிலுள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றது.இந்த ஒற்றுமைக்கான பயணத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிழக்கை அடிப்டையாகக் கொண்டியங்கும் அரசியல் சக்திகள் அனைவரையும் ஒன்றிணைத்து போட்டியிட உள்ளதோடு எதிர்காலத்தில் பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளையும் சிவில் சமூக ஆர்வலர்களையும் ஒன்றிணைத்து அதனுடாக எதிர்காலத்தில் கிழக்குத் தமிழர்களின் அரசியல்,சமூக பாதுகாப்பு அரணாக பலம்பொருந்திய கட்டமைப்பாக இது செயல்படவுள்ளது. புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன்,  முற்போக்கு தமிழர் கழக செயலாளர் யோகநாதன் ரொஸ்மன் உட்பட குறித்த இரு கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now