• Sep 19 2024

இலங்கையில் பட்டதாரிகள் கூலி வேலை செய்யும் இடர்நிலை; மழுங்கடிக்கப்படும் ஆளுமையுள்ள பட்டதாரிகளின் திறமைகள்!

Chithra / Feb 9th 2023, 4:13 pm
image

Advertisement

வேலையற்ற பட்டதாரிகளாகக் காணப்படும் நாங்கள் பல்கலைக்கழகத்தினூடாக பட்டதாரிகளாக வெளியேறி தற்சமயம் வேலைவாய்ப்பற்று பல இடர்களைச் சந்தித்தவண்ணமுள்ளோம். தற்சமயம் நாட்டை கட்டியெழுப்ப இளைஞர்களின் பங்களிப்பு கட்டாயமானதாகும் என வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்க ஊடகப் பேச்சாளர் தர்மலிங்கம் கஜன் தெரிவித்தார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்தில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

நாம் எமது நாட்டிலுள்ள வளங்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது முக்கியமான விடயம். நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் முதல்கொண்டு அதிகாரிகள் வரை பொதுமக்கள் எமது பிரச்சினையை தெளிவுபடுத்தவேண்டிய கடப்பாடுள்ளது.

இதுவரை காலமும் நீண்ட காலப் போராட்டங்களை நடாத்தியே வேலைவாய்ப்பை பெற்றுக்கொண்டனர். இது ஒரு மன வேதனைக்குரிய விடயம். 

எமது நாட்டிற்கு இளைஞர்களின் பங்களிப்பை கொடுத்து நாட்டை முன்னேற்றுவது தொடர்பில் நாம் சொல்ல வேண்டிய நிலை உள்ளது. 

பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய பட்டதாரிகளுக்கு எதிர்வரும் 12ம் திகதி பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இலங்கை பல் சமயக் கருத்தாடல் நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறிய அனைத்து வேலையற்ற பட்டதாரிகளையும் சந்தித்து அடுத்த கட்ட முடிவுகளை எடுக்கவுள்ளோம். 

ஆகவே அக் கலந்துரையாடலில் வேலையற்று இடர்நிலைகளை சந்திக்கும் அனைத்துப் பட்டதாரிகளையும் அழைத்து நிற்கின்றோம். 

மேலும் எதிர்வரும் காலங்களில் ஆளுநரையும் சந்தித்து எமது கோரிக்கைகளை முன்வைக்க எதிர்பார்த்துள்ளோம்.

தற்சமயம் பல பட்டதாரிகள் கூலி வேலை செய்யும் இடர் நிலை தோன்றியுள்ளது. ஆளுமையுள்ள பட்டதாரிகளின் திறமைகள் மழுங்கடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

அதேவேளை தனியார் துறைகளில் வேலைவாய்ப்பை தேடிச் செல்கின்றே போதும் கூட நிராகரிக்கப்படும் நிலை தொடர்கிறது. சுய தொழில் மூலம் வேலைவாய்ப்பை தேட முற்படும் சந்தர்ப்பத்தில் கூட வங்கிகளில் கடனைப் பெற்று தொழிலை ஆரம்பிக்க முடியாத நிலை தொடர்கின்றது. 

இம்முறை ஆசிரிய நியமனங்களுக்காக பட்டதாரிகளை சேர்க்கின்ற வேலைத்திட்டத்திலும் இளம் பட்டதாரிகளை இணைப்பதாகத் தெரியவில்லை. மாறாக ஏற்கனவே அரசாங்கத்தில் உள்ள ஊழியர்களுக்கே

வேலைவாய்ப்பானது வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான வேலைவாய்ப்புச்  சந்தர்ப்பங்களை வழங்கப்படும் வேளையில் மட்டுமே எமது பொருளாதாரத்தையும் வளர்த்துக் கொள்ள முடியும்.

இலங்கையில் உள்ள நிர்வாகக் கட்டமைப்பில் வேலைவாய்ப்பு பற்றாக்குறை நிலவுகின்றது. வேலையற்ற பட்டதாரிகளை அவ் வெற்றிடங்களுக்கு நியமிக்க வேண்டும். என்றார்

இலங்கையில் பட்டதாரிகள் கூலி வேலை செய்யும் இடர்நிலை; மழுங்கடிக்கப்படும் ஆளுமையுள்ள பட்டதாரிகளின் திறமைகள் வேலையற்ற பட்டதாரிகளாகக் காணப்படும் நாங்கள் பல்கலைக்கழகத்தினூடாக பட்டதாரிகளாக வெளியேறி தற்சமயம் வேலைவாய்ப்பற்று பல இடர்களைச் சந்தித்தவண்ணமுள்ளோம். தற்சமயம் நாட்டை கட்டியெழுப்ப இளைஞர்களின் பங்களிப்பு கட்டாயமானதாகும் என வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்க ஊடகப் பேச்சாளர் தர்மலிங்கம் கஜன் தெரிவித்தார்.யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்தில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாம் எமது நாட்டிலுள்ள வளங்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது முக்கியமான விடயம். நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் முதல்கொண்டு அதிகாரிகள் வரை பொதுமக்கள் எமது பிரச்சினையை தெளிவுபடுத்தவேண்டிய கடப்பாடுள்ளது.இதுவரை காலமும் நீண்ட காலப் போராட்டங்களை நடாத்தியே வேலைவாய்ப்பை பெற்றுக்கொண்டனர். இது ஒரு மன வேதனைக்குரிய விடயம். எமது நாட்டிற்கு இளைஞர்களின் பங்களிப்பை கொடுத்து நாட்டை முன்னேற்றுவது தொடர்பில் நாம் சொல்ல வேண்டிய நிலை உள்ளது. பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய பட்டதாரிகளுக்கு எதிர்வரும் 12ம் திகதி பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இலங்கை பல் சமயக் கருத்தாடல் நிலையத்தில் இடம்பெறவுள்ளது.பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறிய அனைத்து வேலையற்ற பட்டதாரிகளையும் சந்தித்து அடுத்த கட்ட முடிவுகளை எடுக்கவுள்ளோம். ஆகவே அக் கலந்துரையாடலில் வேலையற்று இடர்நிலைகளை சந்திக்கும் அனைத்துப் பட்டதாரிகளையும் அழைத்து நிற்கின்றோம். மேலும் எதிர்வரும் காலங்களில் ஆளுநரையும் சந்தித்து எமது கோரிக்கைகளை முன்வைக்க எதிர்பார்த்துள்ளோம்.தற்சமயம் பல பட்டதாரிகள் கூலி வேலை செய்யும் இடர் நிலை தோன்றியுள்ளது. ஆளுமையுள்ள பட்டதாரிகளின் திறமைகள் மழுங்கடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.அதேவேளை தனியார் துறைகளில் வேலைவாய்ப்பை தேடிச் செல்கின்றே போதும் கூட நிராகரிக்கப்படும் நிலை தொடர்கிறது. சுய தொழில் மூலம் வேலைவாய்ப்பை தேட முற்படும் சந்தர்ப்பத்தில் கூட வங்கிகளில் கடனைப் பெற்று தொழிலை ஆரம்பிக்க முடியாத நிலை தொடர்கின்றது. இம்முறை ஆசிரிய நியமனங்களுக்காக பட்டதாரிகளை சேர்க்கின்ற வேலைத்திட்டத்திலும் இளம் பட்டதாரிகளை இணைப்பதாகத் தெரியவில்லை. மாறாக ஏற்கனவே அரசாங்கத்தில் உள்ள ஊழியர்களுக்கேவேலைவாய்ப்பானது வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறான வேலைவாய்ப்புச்  சந்தர்ப்பங்களை வழங்கப்படும் வேளையில் மட்டுமே எமது பொருளாதாரத்தையும் வளர்த்துக் கொள்ள முடியும்.இலங்கையில் உள்ள நிர்வாகக் கட்டமைப்பில் வேலைவாய்ப்பு பற்றாக்குறை நிலவுகின்றது. வேலையற்ற பட்டதாரிகளை அவ் வெற்றிடங்களுக்கு நியமிக்க வேண்டும். என்றார்

Advertisement

Advertisement

Advertisement