• Oct 14 2024

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சஹாரா பாலைவனம்

Anaath / Oct 13th 2024, 8:30 am
image

Advertisement

தென்கிழக்கு மொராக்கோ பகுதியில் கடந்த இரண்டு நாட்கள் பெய்த கனமழையால்  வெள்ளக்பெருக்கு ஏற்பட்டுள்ளதில் வறண்ட சஹாரா பாலைவனம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தலைநகர் ரபாத்தில் இருந்து 450 கிமீ தெற்கே அமைந்துள்ள டகோனைட் கிராமத்தில் செப்டம்பர் மாதம் 24 மணி நேரத்தில் 100 மிமீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, ஜகோராவிற்கும் டாடாவிற்கும் இடையே பல ஆண்டுகளாக நிரம்பாமல் இருந்த ஏரிகள் நிரம்பியுள்ளது நாசாவால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.  குறுகிய கால இடைவெளியில் அதிகளவான மழை பெய்து 30 முதல் 50 ஆண்டுகள் ஆகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சஹாரா பாலைவனம், வடக்கு, மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா முழுவதும் 9 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது. புவி வெப்பமடைதல் மற்றும் தீவிர வானிலை காரணமாக அதிகரிப்பு அதிகரிக்கும் என்றும் எதிர்காலத்தில் இந்த அளவிலான புயல்கள் இப்பகுதியில் அடிக்கடி ஏற்படக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். முன்னதாக, மொராக்கோவில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் 18 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சஹாரா பாலைவனம் தென்கிழக்கு மொராக்கோ பகுதியில் கடந்த இரண்டு நாட்கள் பெய்த கனமழையால்  வெள்ளக்பெருக்கு ஏற்பட்டுள்ளதில் வறண்ட சஹாரா பாலைவனம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தலைநகர் ரபாத்தில் இருந்து 450 கிமீ தெற்கே அமைந்துள்ள டகோனைட் கிராமத்தில் செப்டம்பர் மாதம் 24 மணி நேரத்தில் 100 மிமீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனிடையே, ஜகோராவிற்கும் டாடாவிற்கும் இடையே பல ஆண்டுகளாக நிரம்பாமல் இருந்த ஏரிகள் நிரம்பியுள்ளது நாசாவால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.  குறுகிய கால இடைவெளியில் அதிகளவான மழை பெய்து 30 முதல் 50 ஆண்டுகள் ஆகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் சஹாரா பாலைவனம், வடக்கு, மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா முழுவதும் 9 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது. புவி வெப்பமடைதல் மற்றும் தீவிர வானிலை காரணமாக அதிகரிப்பு அதிகரிக்கும் என்றும் எதிர்காலத்தில் இந்த அளவிலான புயல்கள் இப்பகுதியில் அடிக்கடி ஏற்படக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். முன்னதாக, மொராக்கோவில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் 18 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement