• Dec 28 2024

புத்தளத்தில் பாடசாலை அதிபரை கௌரவமாக வழியனுப்பி வைத்த பாடசாலை சமூகம்...!

Sharmi / Jun 21st 2024, 3:07 pm
image

புத்தளம் - மதுரங்குளி கோட்டக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் அதிபர் என்.எம்.எம்.நஜீப், நேற்று (20) ஓய்வு பெறுவதையிட்டு அவருக்கான சேவை நலன் பாராட்டு விழாவென்று பாடசாலை வளாகத்தில் நேற்று(21)  இடம்பெற்றது.

பாடசாலையில் பதில் அதிபர் முஹம்மது ஹுதைபா தலைமையிலும், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பாடசாலை உருவாக்கக் குழு என்பனவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், குறித்த பாடசாலையின் ஸ்தாபக தலைவரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எஸ்.ஆப்தீன் எஹியா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும், விஷேட அதிதியாக கற்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் கே.எம்.எம்.பைஸர் மரிக்கார் மற்றும் அதிதிகளாக புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஏ.எச்.எம்.அருஜுனா, புத்தளம் - தெற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜீவிகா சந்திரசேகர, கல்விப் பணிப்பாளர் (ஆசிரியர் பிரிவு) திருமதி காந்தி லதா உட்பட அயல் பாடசாலை அதிபர்கள், ஓய்வு நிலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்  என பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் போது ஓய்வு பெற்றுச் செல்லும் அதிபருக்கு சேவை நலன் பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு , பாடசாலையின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எஸ்.ஆப்தீன் எஹியாவினால் அவரது எஹியா பௌண்டேஷன் ஊடாக புனித உம்ரா  செய்வதற்கான நிதியும் வழங்கி , நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவித்தார்.

அத்தோடு பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை உருவாக்கக் குழு என்பனவற்றின் ஏற்பாட்டில் அதிபரின் சேவையை பாராட்டி மோட்டார் சைக்கிள் ஒன்றை அன்பளிப்பாக வழங்கி கௌரவித்தனர்.

இதேவேளை புத்தளம் - தெற்கு கோட்டத்துக்குட்பட்ட அதிபர்கள் சங்கமும் ஓய்வு பெரும் அதிபரை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

அத்துடன், புத்தளம் வலயக் கல்விப் பணிபாளர், புத்தளம் தெற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர், கல்விப் பணிபாளர் ஆகியோருக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், ஓய்வுநிலை அதிபர் நடராஜா  தனது மாணவனான ஓய்வு பெறும் அதிபர் என்.எம்.எம். நஜீப் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்த  அதேவேளை, அதிபர் நஜீப் அவர்களும் தனக்கு கற்பித்த ஆசிரியரான நடராஜா அதிபருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

இதன்போது  பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் ஓய்வுபெற்றுச் செல்லும் அதிபருக்கு தமது அன்பளிப்புக்களையும், நினைவுச் சின்னங்களையும் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.



புத்தளத்தில் பாடசாலை அதிபரை கௌரவமாக வழியனுப்பி வைத்த பாடசாலை சமூகம். புத்தளம் - மதுரங்குளி கோட்டக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் அதிபர் என்.எம்.எம்.நஜீப், நேற்று (20) ஓய்வு பெறுவதையிட்டு அவருக்கான சேவை நலன் பாராட்டு விழாவென்று பாடசாலை வளாகத்தில் நேற்று(21)  இடம்பெற்றது.பாடசாலையில் பதில் அதிபர் முஹம்மது ஹுதைபா தலைமையிலும், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பாடசாலை உருவாக்கக் குழு என்பனவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், குறித்த பாடசாலையின் ஸ்தாபக தலைவரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எஸ்.ஆப்தீன் எஹியா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.மேலும், விஷேட அதிதியாக கற்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் கே.எம்.எம்.பைஸர் மரிக்கார் மற்றும் அதிதிகளாக புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஏ.எச்.எம்.அருஜுனா, புத்தளம் - தெற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜீவிகா சந்திரசேகர, கல்விப் பணிப்பாளர் (ஆசிரியர் பிரிவு) திருமதி காந்தி லதா உட்பட அயல் பாடசாலை அதிபர்கள், ஓய்வு நிலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்  என பலரும் கலந்துகொண்டனர்.இந்நிகழ்வின் போது ஓய்வு பெற்றுச் செல்லும் அதிபருக்கு சேவை நலன் பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு , பாடசாலையின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எஸ்.ஆப்தீன் எஹியாவினால் அவரது எஹியா பௌண்டேஷன் ஊடாக புனித உம்ரா  செய்வதற்கான நிதியும் வழங்கி , நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவித்தார்.அத்தோடு பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை உருவாக்கக் குழு என்பனவற்றின் ஏற்பாட்டில் அதிபரின் சேவையை பாராட்டி மோட்டார் சைக்கிள் ஒன்றை அன்பளிப்பாக வழங்கி கௌரவித்தனர்.இதேவேளை புத்தளம் - தெற்கு கோட்டத்துக்குட்பட்ட அதிபர்கள் சங்கமும் ஓய்வு பெரும் அதிபரை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.அத்துடன், புத்தளம் வலயக் கல்விப் பணிபாளர், புத்தளம் தெற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர், கல்விப் பணிபாளர் ஆகியோருக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டன.மேலும், ஓய்வுநிலை அதிபர் நடராஜா  தனது மாணவனான ஓய்வு பெறும் அதிபர் என்.எம்.எம். நஜீப் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்த  அதேவேளை, அதிபர் நஜீப் அவர்களும் தனக்கு கற்பித்த ஆசிரியரான நடராஜா அதிபருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.இதன்போது  பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் ஓய்வுபெற்றுச் செல்லும் அதிபருக்கு தமது அன்பளிப்புக்களையும், நினைவுச் சின்னங்களையும் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement