• Nov 24 2024

பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் பல்கலை மாணவர்கள்..! பறிபோகும் உயிர்கள்..! வெளியான அதிர்ச்சித் தகவல்

Chithra / Dec 17th 2023, 8:04 am
image

 

கடந்த காலங்களில் 12 பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்காலத்தில் நம்பிக்கை இல்லாமல் உயிர்மாய்த்துக் கொண்டுள்ளதாக  மல்வத்து பீடத்தின் அனுநாயக்க  கலாநிதி நியங்கொட ஸ்ரீ விஜிதசிறி தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று கல்வி கற்கும் பிள்ளைகள் கூட பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தற்போதுள்ள அமைப்பின் அடிப்படையில் எதிர்காலத்தில் நம்பிக்கை இல்லாமல், அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலை.

இன்று நாட்டில் பல பொருளாதார பிரச்சினைகள் உள்ளன.

மின் கட்டணம் உள்ளிட்ட பிற பொருளாதார சிக்கல்கள் காரணமாக ஒரு விகாரையைக் கூட நடத்த முடியாது உள்ளது.

மதச் சடங்குகளை முறையாகச் செய்ய வழியில்லை. ஜனவரி முதல், இந்த பிரச்சினைகள் அதிகரிக்கவுள்ளன.

மக்கள் மேலும் ஆதரவற்றவர்களாக மாறி வருகின்றனர்.

இன்று இந்நாட்டு மக்கள் ஒரு வேளை சமைத்து காலை, மதியம், இரவு என உண்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் பல்கலை மாணவர்கள். பறிபோகும் உயிர்கள். வெளியான அதிர்ச்சித் தகவல்  கடந்த காலங்களில் 12 பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்காலத்தில் நம்பிக்கை இல்லாமல் உயிர்மாய்த்துக் கொண்டுள்ளதாக  மல்வத்து பீடத்தின் அனுநாயக்க  கலாநிதி நியங்கொட ஸ்ரீ விஜிதசிறி தேரர் தெரிவித்துள்ளார்.இன்று கல்வி கற்கும் பிள்ளைகள் கூட பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,தற்போதுள்ள அமைப்பின் அடிப்படையில் எதிர்காலத்தில் நம்பிக்கை இல்லாமல், அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலை.இன்று நாட்டில் பல பொருளாதார பிரச்சினைகள் உள்ளன.மின் கட்டணம் உள்ளிட்ட பிற பொருளாதார சிக்கல்கள் காரணமாக ஒரு விகாரையைக் கூட நடத்த முடியாது உள்ளது.மதச் சடங்குகளை முறையாகச் செய்ய வழியில்லை. ஜனவரி முதல், இந்த பிரச்சினைகள் அதிகரிக்கவுள்ளன.மக்கள் மேலும் ஆதரவற்றவர்களாக மாறி வருகின்றனர்.இன்று இந்நாட்டு மக்கள் ஒரு வேளை சமைத்து காலை, மதியம், இரவு என உண்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement