எந்த தேர்தலையும் எதிர்கொள்வதற்கு இலங்கை தமிழரசுக்கட்சி தயார் நிலையில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - செட்டிபாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தினை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி அவர் விரும்பிய அனைத்து சட்டமூலங்களையும் மொட்டு கட்சியினரை வைத்து செயற்படுத்தி கொள்கின்றார்.
இந்த வகையில் தமிழ் மக்களினுடைய அரசியல் தீர்வு விடயத்திலும் அரசியலமைப்பில் செய்ய வேண்டிய திருத்தங்களையும் அவர் கடந்த காலங்களில் செய்திருக்கலாம்.
அவை ஒன்றையும் செய்யாமல் மீண்டும் ஜனாதிபதியாக வந்து இரண்டு வருடத்தில் தீர்வுகளை பெற்றுத்தருவதாக கூறுவதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடத்தப்படுமா அல்லது நாடாளுமன்றத் தேர்தல் முதலில் நடாத்தப்படுமா என்பது ஜனாதிபதிக்கு மட்டுமே தெரியும்.
எந்த தேர்தல் முதலில் நடைபெற்றாலும் அதை எதிர்கொள்வதற்கு இலங்கை தமிழரசுக்கட்சி தயார் நிலையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
எந்த தேர்தலையும் எதிர்கொள்ள தமிழரசுக்கட்சி தயார். சாணக்கியன் திட்டவட்டம் எந்த தேர்தலையும் எதிர்கொள்வதற்கு இலங்கை தமிழரசுக்கட்சி தயார் நிலையில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பு - செட்டிபாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தினை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி அவர் விரும்பிய அனைத்து சட்டமூலங்களையும் மொட்டு கட்சியினரை வைத்து செயற்படுத்தி கொள்கின்றார்.இந்த வகையில் தமிழ் மக்களினுடைய அரசியல் தீர்வு விடயத்திலும் அரசியலமைப்பில் செய்ய வேண்டிய திருத்தங்களையும் அவர் கடந்த காலங்களில் செய்திருக்கலாம்.அவை ஒன்றையும் செய்யாமல் மீண்டும் ஜனாதிபதியாக வந்து இரண்டு வருடத்தில் தீர்வுகளை பெற்றுத்தருவதாக கூறுவதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடத்தப்படுமா அல்லது நாடாளுமன்றத் தேர்தல் முதலில் நடாத்தப்படுமா என்பது ஜனாதிபதிக்கு மட்டுமே தெரியும்.எந்த தேர்தல் முதலில் நடைபெற்றாலும் அதை எதிர்கொள்வதற்கு இலங்கை தமிழரசுக்கட்சி தயார் நிலையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.