• Nov 28 2024

தமிழ் மக்களுடைய சுதந்திரத்திற்கான பொதுமக்கள் வாக்கெடுப்பு தொடர்பில் தமிழரசு கட்சி தீர்மானத்தை எடுக்க வேண்டும் - சிவாஜிலிங்கம் கோரிக்கை...!

Sharmi / Feb 13th 2024, 12:08 pm
image

ஈழத் தமிழ் மக்களுடைய சுதந்திரத்திற்கான பொதுமக்கள் வாக்கெடுப்பு தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சி தீர்மானத்தை எடுக்க வேண்டுமென முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்   எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈழத் தமிழ் மக்களுடைய சுதந்திரத்திற்கான பொதுமக்கள் வாக்கெடுப்பை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் வலியுறுத்தவில்லை. எனினும் கடந்த வாரம் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,  அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளை சந்தித்த போது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை பொதுமக்கள் வாக்கெடுப்பு மூலம் நடாத்த வலியுறுத்துமாறு அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னனியினர் கடந்த 2020 பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் பொதுவாக்கெடுப்பு தொடர்பில் குறிப்பிட்டிருந்தாலும் வலியுறுத்தாது இருந்து அதற்கு பல்வேறு காரணங்களை கூறிக்கொண்டிருந்தவர்கள்  தற்போது அதனை வலியுறுத்துவது வரவேற்கத்தக்கது.

இவ்வாறானதொரு நிலையில், ஜனநாயக போராளிகள் கட்சியினரும் இலங்கை தமிழரசுக் கட்சியினருமே வாக்கெடுப்பை உத்தியோகபூர்வமாக கோரவில்லை. அவர்களும் வாக்கெடுப்பை கோரும் பட்சத்தில் அது முக்கியமான விடயமாக  பார்க்கப்படும்.

தமிழகம் உள்ளிட்ட புலம்பெயர் தேசங்களிலே ஈழத் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளின் வேகம் தற்போது குறைவடைந்து செல்கின்றது.

இலங்கைக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வில்லை என்பதை நாம் உணரவேண்டும்.

எனவே சுதந்திரத்திற்கான பொதுவாக்கெடுப்பை வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் நடாத்துவதற்கு அனைவரும் வலியுறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.


தமிழ் மக்களுடைய சுதந்திரத்திற்கான பொதுமக்கள் வாக்கெடுப்பு தொடர்பில் தமிழரசு கட்சி தீர்மானத்தை எடுக்க வேண்டும் - சிவாஜிலிங்கம் கோரிக்கை. ஈழத் தமிழ் மக்களுடைய சுதந்திரத்திற்கான பொதுமக்கள் வாக்கெடுப்பு தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சி தீர்மானத்தை எடுக்க வேண்டுமென முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்   எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.யாழில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,ஈழத் தமிழ் மக்களுடைய சுதந்திரத்திற்கான பொதுமக்கள் வாக்கெடுப்பை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் வலியுறுத்தவில்லை. எனினும் கடந்த வாரம் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,  அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளை சந்தித்த போது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை பொதுமக்கள் வாக்கெடுப்பு மூலம் நடாத்த வலியுறுத்துமாறு அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.தமிழ் தேசிய மக்கள் முன்னனியினர் கடந்த 2020 பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் பொதுவாக்கெடுப்பு தொடர்பில் குறிப்பிட்டிருந்தாலும் வலியுறுத்தாது இருந்து அதற்கு பல்வேறு காரணங்களை கூறிக்கொண்டிருந்தவர்கள்  தற்போது அதனை வலியுறுத்துவது வரவேற்கத்தக்கது.இவ்வாறானதொரு நிலையில், ஜனநாயக போராளிகள் கட்சியினரும் இலங்கை தமிழரசுக் கட்சியினருமே வாக்கெடுப்பை உத்தியோகபூர்வமாக கோரவில்லை. அவர்களும் வாக்கெடுப்பை கோரும் பட்சத்தில் அது முக்கியமான விடயமாக  பார்க்கப்படும்.தமிழகம் உள்ளிட்ட புலம்பெயர் தேசங்களிலே ஈழத் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளின் வேகம் தற்போது குறைவடைந்து செல்கின்றது.இலங்கைக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வில்லை என்பதை நாம் உணரவேண்டும்.எனவே சுதந்திரத்திற்கான பொதுவாக்கெடுப்பை வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் நடாத்துவதற்கு அனைவரும் வலியுறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement