ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தின் மூலம் கலந்து கொண்ட நிகழ்வுகளில் அவரது அறிவிப்புக்கள் ஜனாதிபதியின் இயலாமையையும் பலவீனத்தையும் வெளிப்படுத்தியது மாத்திரமல்ல அவர் தனது தந்திரம் என நினைக்கும் காலம் கடத்தும் பொய்களையும் தமிழ் மக்கள் நன்றாக உணர்ந்து விட்டனர்.
ரணில் விக்கிரமசிங்க நினைக்கலாம் தனது எதிர்கால தேர்தலுக்கான ஆதரவுத் தளத்தை வலுப்படுத்தும் என. ஆனால் உண்மை அதுவல்ல நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல தொடர்ச்சியான ரணில் விக்கிரமசிங்காவின் அதிகப் பிரசிங்கித் தனம் ஐனாதிபதியின் இயலாமையை தோல்லுரித்துக் காட்டுகின்றது என ரெலோ இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழ் மக்கள் அரசியல் தெரியாதவர்கள் என நினைத்து காதில் பூச்சுற்றும் கதைகளை மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களில் கூறியுள்ளார்.
உயர் பாதுகாப்பு வலய காணிகளை விடுப்பதற்கு ஜனாதிபதி கபினட்டில் தீர்மானம் எடுத்த பின்னர் தான் நடவடிக்கை எடுக்க முடியும் ஆனால் அப்படியான தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் மாவட்ட அதிகாரிகளை பார்த்து நீங்கள் தான் விரைந்து அடுத்த ஆண்டிற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியமை பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றும் செயல்.
பொருளாதார வளர்ச்சிக்கு மத நல்லிணக்கம் மிக அவசியமென கூறியது மிகவும் வேடிக்கையான விடையம் காரணம் நாட்டின் உள்ள அத்தனை துறைகளுக்குமான நல்லிணக்கம் இன நல்லிணக்கம் மூலமே நிலையானதாக ஏற்படும் என்ற உண்மை தெரிந்தும் தமிழரின் இனப்பிரச்சினை விவகாரத்தைப் பற்றி கதைப்பதை தவிர்ப்பதற்காக மத நல்லிணக்கத்தை பேசியுள்ளார் ஆனால் ஜனாதிபதி வடக்கில் மத நல்லிணக்கம் பற்றி பேசும் சம நேரம் கிழக்கில் மூதூரில் ராஜவந்தான் மலையில் தமிழ் மக்களின் எதிர்ப்பின் மத்தியில் பாரிய புத்தர்சிலை வைக்கப்படுகிறது பேச்சளவில் நல்லிணக்கம் செயலில் மத ஆக்கிரமிப்பு.
இலங்கை ஒரு சிவபூமி, பழைமை வாய்ந்த மதம் இந்துமதம் போன்ற கருத்துக்களை ஜனாதிபதி கூறியதை நாம் வரவேற்கின்றோம்.
இவ்வாறு கருத்துக் கூறும் ஐனாதிபதியால் திருக்கோணேசர் ஆலயம் மற்றும் திருக்கேதீஸ்வரம் போன்ற தொன்மை வாய்ந்த சிவபூமிகளை புனிப் பிரதேசமாக அறிவிக்க முடியுமா?
பதின்மூன்றாம் திருத்தம் மாகாண அபிவிருத்திக்கு மாகாணசபைகளுக்கு போதுமானது என தெரிவித்த ஜனாதிபதி கடந்த மாதங்களில் தமிழ்க் கட்சிகளை சந்திக்கும் போது பதின்மூன்றாம் திருத்தத்தை அமுல்படுத்த பாராளுமன்றத்தின் அனுமதி தேவை அதே நேரம் நான் பொலிஸ் அதிகாரம் தரமாட்டேன் எனக் கூறியவர் அதனை மறந்து பித்தலாட்டம் போடுகிறார்.
ஜனாதிபதியின் இயலாமையை வடக்கு மாகாண வருகையின் போது அவரது வாய்மூல அறிக்கைகள் தமிழ் மக்களை உணர வைத்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு வருகை மூலம் ஜனாதிபதியின் பலவீனத்தை தமிழ் மக்கள் உணர்ந்துள்ளனர் - சபா குகதாஸ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தின் மூலம் கலந்து கொண்ட நிகழ்வுகளில் அவரது அறிவிப்புக்கள் ஜனாதிபதியின் இயலாமையையும் பலவீனத்தையும் வெளிப்படுத்தியது மாத்திரமல்ல அவர் தனது தந்திரம் என நினைக்கும் காலம் கடத்தும் பொய்களையும் தமிழ் மக்கள் நன்றாக உணர்ந்து விட்டனர். ரணில் விக்கிரமசிங்க நினைக்கலாம் தனது எதிர்கால தேர்தலுக்கான ஆதரவுத் தளத்தை வலுப்படுத்தும் என. ஆனால் உண்மை அதுவல்ல நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல தொடர்ச்சியான ரணில் விக்கிரமசிங்காவின் அதிகப் பிரசிங்கித் தனம் ஐனாதிபதியின் இயலாமையை தோல்லுரித்துக் காட்டுகின்றது என ரெலோ இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,தமிழ் மக்கள் அரசியல் தெரியாதவர்கள் என நினைத்து காதில் பூச்சுற்றும் கதைகளை மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களில் கூறியுள்ளார்.உயர் பாதுகாப்பு வலய காணிகளை விடுப்பதற்கு ஜனாதிபதி கபினட்டில் தீர்மானம் எடுத்த பின்னர் தான் நடவடிக்கை எடுக்க முடியும் ஆனால் அப்படியான தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் மாவட்ட அதிகாரிகளை பார்த்து நீங்கள் தான் விரைந்து அடுத்த ஆண்டிற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியமை பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றும் செயல்.பொருளாதார வளர்ச்சிக்கு மத நல்லிணக்கம் மிக அவசியமென கூறியது மிகவும் வேடிக்கையான விடையம் காரணம் நாட்டின் உள்ள அத்தனை துறைகளுக்குமான நல்லிணக்கம் இன நல்லிணக்கம் மூலமே நிலையானதாக ஏற்படும் என்ற உண்மை தெரிந்தும் தமிழரின் இனப்பிரச்சினை விவகாரத்தைப் பற்றி கதைப்பதை தவிர்ப்பதற்காக மத நல்லிணக்கத்தை பேசியுள்ளார் ஆனால் ஜனாதிபதி வடக்கில் மத நல்லிணக்கம் பற்றி பேசும் சம நேரம் கிழக்கில் மூதூரில் ராஜவந்தான் மலையில் தமிழ் மக்களின் எதிர்ப்பின் மத்தியில் பாரிய புத்தர்சிலை வைக்கப்படுகிறது பேச்சளவில் நல்லிணக்கம் செயலில் மத ஆக்கிரமிப்பு.இலங்கை ஒரு சிவபூமி, பழைமை வாய்ந்த மதம் இந்துமதம் போன்ற கருத்துக்களை ஜனாதிபதி கூறியதை நாம் வரவேற்கின்றோம்.இவ்வாறு கருத்துக் கூறும் ஐனாதிபதியால் திருக்கோணேசர் ஆலயம் மற்றும் திருக்கேதீஸ்வரம் போன்ற தொன்மை வாய்ந்த சிவபூமிகளை புனிப் பிரதேசமாக அறிவிக்க முடியுமாபதின்மூன்றாம் திருத்தம் மாகாண அபிவிருத்திக்கு மாகாணசபைகளுக்கு போதுமானது என தெரிவித்த ஜனாதிபதி கடந்த மாதங்களில் தமிழ்க் கட்சிகளை சந்திக்கும் போது பதின்மூன்றாம் திருத்தத்தை அமுல்படுத்த பாராளுமன்றத்தின் அனுமதி தேவை அதே நேரம் நான் பொலிஸ் அதிகாரம் தரமாட்டேன் எனக் கூறியவர் அதனை மறந்து பித்தலாட்டம் போடுகிறார்.ஜனாதிபதியின் இயலாமையை வடக்கு மாகாண வருகையின் போது அவரது வாய்மூல அறிக்கைகள் தமிழ் மக்களை உணர வைத்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.