• Nov 23 2024

பிரதமர் மோடிக்கு தமிழர் தரப்பு மீண்டும் ஒன்றிணைந்த கோரிக்கையை அனுப்ப வேண்டும்...! சபா.குகதாஸ் கோரிக்கை...!

Sharmi / Jun 12th 2024, 2:17 pm
image

கடந்த காலத்தில் இந்திய இராஜதந்திர தரப்புக்கும், தமிழர் தரப்பிற்கும் ஏற்பட்ட கசப்பான விடையங்கள் இனியும் மீள் நிகழாது இருப்பதற்கு தமிழர் தரப்பு ஒற்றுமைக் கடிதம் அனுப்பவேண்டியது காலத்தின் கட்டாயம் என  முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரால் இன்று(12) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது தடவையாக பதவி ஏற்ற பின்னர் இந்திய வெளிவிகார அமைச்சர் ஐெய்சங்கருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பில் வரும் ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி இலங்கை வர இருப்பதான செய்தியை குறிப்பிட்டிருந்தார்.

அதேவேளை, தமிழர் தரப்பில் பிரதமர் மோடிக்கு தனித் தனியாக வாழ்த்துக்களை அனுப்பினாலும் வேறுபட்ட கோரிக்கைகளையும் வாழ்த்துடன் சிலர் இணைத்திருந்தமையை காண முடிந்தது. 

கடந்த காலத்தில் பிரதமர் மோடிக்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பினர். 

அதன் பின்னர்  பாரதப் பிரதமர் மோடி அவர்களை சந்திப்பதற்கான அழைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் குழுவினருக்கு இந்தியத் தரப்பால்  அனுப்பப்பட்டது. அதற்கு அலட்சியமான காரணங்களை பொது வெளியில் கூறி சந்திப்பை தவிர்த்தனர்.

இம்முறை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட  அமைப்புக்களும் இணைந்து மீண்டும் ஒரு கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை சகல அமைப்புக்களினது கையொப்பங்களுடன் அனுப்ப வேண்டும்.

 வடக்கு கிழக்கு மாகாணங்கள்  ஈழத் தமிழரின் பூர்வீக வாழ்விடம் என்பதை இலங்கை இந்திய ஒப்பந்தம் மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அதற்கான அரசியல் அதிகாரப் பகிர்வை பாரத தேசம் பெற்றுத் தருவதற்கான சூழலை தமிழர் தரப்பு ஒற்றுமையாக உருவாக்க வேண்டும்.

இலங்கைத் தீவில் ஜனாதிபதிக் கதிரையில் அமர்பவரை பெரும்பாலும் பிராந்திய, பூகோள நாடுகளே தீர்மானிக்கின்றன.  அத்துடன் கடந்த காலத்தில் இந்திய இராஜதந்திர தரப்புக்கும் தமிழர் தரப்பிற்கும் ஏற்பட்ட கசப்பான விடயங்கள் இனியும் மீள் நிகழாது இருப்பதற்கு ஒற்றுமைக் கடிதம் காலத்தின் கட்டாயம்.

தென்னாசிய பிராந்தியத்தில் இந்தியா தனது  வெளி விவகாரத்தில் ஏற்படும் அரசியல், இராஜதந்திர நெருக்கடிகளை முகம் கொடுக்க இலங்கை அரசை தங்கள் அரவணைப்பில் வைத்திருக்க வேண்டும் என இந்திய வெளிவிகார அமைச்சு கொள்கையளவில் தீர்மானித்துள்ளது.

இத்தகைய நிலையில் இந்தியாவின் முடிவுகளை தாண்டி மேற்குலக நாடுகள் தமிழர் விவகாரத்தில் பாரிய மாற்றங்களை கொண்டுவரக் கூடிய ஏது நிலைகள் தெளிவாக இல்லை எனவே ஆட்சியாளர்களின் அறிக்கைகளை விட பிராந்திய சர்வதேச அரசியல் இராஜதந்திர நீரோட்டங்களின் ஊடாகவே ஈழத் தமிழர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும்.

இந்திய ஆட்சியாளர்களையும் அதன் செயற்பாடுகளையும் குறுகிய கதிரை அரசியலுக்காக விமர்சிப்பதும் தனிப்பட்ட கட்சி அரசியலுக்காக கோமாளித்தனமான அறிக்கைகளும் தமிழ் இனத்தை மேலும் பலவீனப்படுத்திவிடும். எனவே இனி வருகின்ற ஐந்து ஆண்டுகள் மோடி அரசே இந்திய மத்திய அரசாங்கமாக இருக்கப் போகிறது அதனை சரியாக தமிழர் தரப்பு கையாள வேண்டும் எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு தமிழர் தரப்பு மீண்டும் ஒன்றிணைந்த கோரிக்கையை அனுப்ப வேண்டும். சபா.குகதாஸ் கோரிக்கை. கடந்த காலத்தில் இந்திய இராஜதந்திர தரப்புக்கும், தமிழர் தரப்பிற்கும் ஏற்பட்ட கசப்பான விடையங்கள் இனியும் மீள் நிகழாது இருப்பதற்கு தமிழர் தரப்பு ஒற்றுமைக் கடிதம் அனுப்பவேண்டியது காலத்தின் கட்டாயம் என  முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவரால் இன்று(12) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது தடவையாக பதவி ஏற்ற பின்னர் இந்திய வெளிவிகார அமைச்சர் ஐெய்சங்கருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பில் வரும் ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி இலங்கை வர இருப்பதான செய்தியை குறிப்பிட்டிருந்தார்.அதேவேளை, தமிழர் தரப்பில் பிரதமர் மோடிக்கு தனித் தனியாக வாழ்த்துக்களை அனுப்பினாலும் வேறுபட்ட கோரிக்கைகளையும் வாழ்த்துடன் சிலர் இணைத்திருந்தமையை காண முடிந்தது. கடந்த காலத்தில் பிரதமர் மோடிக்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பினர்.  அதன் பின்னர்  பாரதப் பிரதமர் மோடி அவர்களை சந்திப்பதற்கான அழைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் குழுவினருக்கு இந்தியத் தரப்பால்  அனுப்பப்பட்டது. அதற்கு அலட்சியமான காரணங்களை பொது வெளியில் கூறி சந்திப்பை தவிர்த்தனர்.இம்முறை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட  அமைப்புக்களும் இணைந்து மீண்டும் ஒரு கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை சகல அமைப்புக்களினது கையொப்பங்களுடன் அனுப்ப வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்கள்  ஈழத் தமிழரின் பூர்வீக வாழ்விடம் என்பதை இலங்கை இந்திய ஒப்பந்தம் மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அதற்கான அரசியல் அதிகாரப் பகிர்வை பாரத தேசம் பெற்றுத் தருவதற்கான சூழலை தமிழர் தரப்பு ஒற்றுமையாக உருவாக்க வேண்டும்.இலங்கைத் தீவில் ஜனாதிபதிக் கதிரையில் அமர்பவரை பெரும்பாலும் பிராந்திய, பூகோள நாடுகளே தீர்மானிக்கின்றன.  அத்துடன் கடந்த காலத்தில் இந்திய இராஜதந்திர தரப்புக்கும் தமிழர் தரப்பிற்கும் ஏற்பட்ட கசப்பான விடயங்கள் இனியும் மீள் நிகழாது இருப்பதற்கு ஒற்றுமைக் கடிதம் காலத்தின் கட்டாயம்.தென்னாசிய பிராந்தியத்தில் இந்தியா தனது  வெளி விவகாரத்தில் ஏற்படும் அரசியல், இராஜதந்திர நெருக்கடிகளை முகம் கொடுக்க இலங்கை அரசை தங்கள் அரவணைப்பில் வைத்திருக்க வேண்டும் என இந்திய வெளிவிகார அமைச்சு கொள்கையளவில் தீர்மானித்துள்ளது.இத்தகைய நிலையில் இந்தியாவின் முடிவுகளை தாண்டி மேற்குலக நாடுகள் தமிழர் விவகாரத்தில் பாரிய மாற்றங்களை கொண்டுவரக் கூடிய ஏது நிலைகள் தெளிவாக இல்லை எனவே ஆட்சியாளர்களின் அறிக்கைகளை விட பிராந்திய சர்வதேச அரசியல் இராஜதந்திர நீரோட்டங்களின் ஊடாகவே ஈழத் தமிழர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும்.இந்திய ஆட்சியாளர்களையும் அதன் செயற்பாடுகளையும் குறுகிய கதிரை அரசியலுக்காக விமர்சிப்பதும் தனிப்பட்ட கட்சி அரசியலுக்காக கோமாளித்தனமான அறிக்கைகளும் தமிழ் இனத்தை மேலும் பலவீனப்படுத்திவிடும். எனவே இனி வருகின்ற ஐந்து ஆண்டுகள் மோடி அரசே இந்திய மத்திய அரசாங்கமாக இருக்கப் போகிறது அதனை சரியாக தமிழர் தரப்பு கையாள வேண்டும் எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement