எதிர்காலத்தில் முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 45 வரை குறைக்க முடியும் என உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் அதிகப்படியான முட்டை உற்பத்தி கிடைப்பதால் முட்டையின் விலை மேலும் குறையும் என அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை முட்டை சந்தையில் 35 ரூபாய் முதல் 48 ரூபாய் வரை முட்டையை நுகர்வோர் வாங்குகின்றனர் என்றும் முட்டையை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தினசரி முட்டை நுகர்வு சுமார் எட்டு மில்லியனாக அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில், தினசரி முட்டை நுகர்வு ஏழு மில்லியன் என்று நுகர்வோர் தரவு அறிக்கைகள் குறிப்பிட்டாலும் கடந்த சில மாதங்களில் குறித்த அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் குறைக்கப்படவுள்ள முட்டை விலை வெளியான அறிவிப்பு எதிர்காலத்தில் முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 45 வரை குறைக்க முடியும் என உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.சந்தையில் அதிகப்படியான முட்டை உற்பத்தி கிடைப்பதால் முட்டையின் விலை மேலும் குறையும் என அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.இதேவேளை முட்டை சந்தையில் 35 ரூபாய் முதல் 48 ரூபாய் வரை முட்டையை நுகர்வோர் வாங்குகின்றனர் என்றும் முட்டையை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.நாட்டில் தினசரி முட்டை நுகர்வு சுமார் எட்டு மில்லியனாக அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இந்த நிலையில், தினசரி முட்டை நுகர்வு ஏழு மில்லியன் என்று நுகர்வோர் தரவு அறிக்கைகள் குறிப்பிட்டாலும் கடந்த சில மாதங்களில் குறித்த அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.