• Nov 23 2024

ஹர்ஷ டி சில்வா எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்...! குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை...!

Sharmi / Jun 8th 2024, 3:07 pm
image

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, அவர் எதிர்நோக்குவதாகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அவ்வாறானதொரு வாக்குமூலமொன்றை அவரிடம் பெற்றுக்கொள்ளவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

ஹர்ஷ டி சில்வா நேற்று (07) பாராளுமன்றத்தில் தமக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், நிதிக்குழுவின் தலைவர் பதவியை தாம் வகித்தமையே  அச்சுறுத்தல்களுக்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

நிலக்கரி பிரச்சினை, சீனி மோசடி, மத்திய வங்கியின் சம்பளப் பிரச்சினைகள் குறித்து நிதிக்குழு தொடர்ந்தும் பேசியதாகவும், அதன் காரணமாக தாம் பல பிரச்சினைகளில் சிக்கியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறானதொரு நிலையில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு வழங்கிய உத்தரவின் அடிப்படையிலேயே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஹர்ஷ டி சில்வாவிடம் வாக்குமூலம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹர்ஷ டி சில்வா எதிர்கொள்ளும் அச்சுறுத்தல். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, அவர் எதிர்நோக்குவதாகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அவ்வாறானதொரு வாக்குமூலமொன்றை அவரிடம் பெற்றுக்கொள்ளவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.ஹர்ஷ டி சில்வா நேற்று (07) பாராளுமன்றத்தில் தமக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், நிதிக்குழுவின் தலைவர் பதவியை தாம் வகித்தமையே  அச்சுறுத்தல்களுக்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.நிலக்கரி பிரச்சினை, சீனி மோசடி, மத்திய வங்கியின் சம்பளப் பிரச்சினைகள் குறித்து நிதிக்குழு தொடர்ந்தும் பேசியதாகவும், அதன் காரணமாக தாம் பல பிரச்சினைகளில் சிக்கியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டிருந்தார்.இவ்வாறானதொரு நிலையில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு வழங்கிய உத்தரவின் அடிப்படையிலேயே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஹர்ஷ டி சில்வாவிடம் வாக்குமூலம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement