பண்டிகை காலம் நெருங்கிய நிலையில் முட்டை, இறைச்சி மற்றும் வெங்காயத்தின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், கோதுமை மா மற்றும் சீனி இறக்குமதியில் முறையற்ற இலாபம் ஈட்டிய தரப்பினரிடம் இருந்து உரிய வரிகளை அறவிடுமாறும் உத்தரவிட்டுள்ளது.
சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் சில்லறை விலையும் தற்போது அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிலோ பெரிய வெங்காயம் 440 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும், கோழி இறைச்சியின் விலையும் சந்தையில் வேகமாக அதிகரித்துள்ளது. எதிர்வரும் வாரங்களில் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்றும் முட்டைகள் 55 ரூபாவுக்கு மேல் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இறக்குமதி செய்யப்பட்ட 6 மில்லியன் முட்டைகள் மக்கள் பாவனைக்கு இன்றும் (13) நாளையும் (14) சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சதொச ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை கொள்வனவு செய்ய வாய்ப்பு உள்ளதாக அதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
நெருங்கும் பண்டிகை காலம். இலங்கையில் உணவுப்பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு. பண்டிகை காலம் நெருங்கிய நிலையில் முட்டை, இறைச்சி மற்றும் வெங்காயத்தின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன், கோதுமை மா மற்றும் சீனி இறக்குமதியில் முறையற்ற இலாபம் ஈட்டிய தரப்பினரிடம் இருந்து உரிய வரிகளை அறவிடுமாறும் உத்தரவிட்டுள்ளது.சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் சில்லறை விலையும் தற்போது அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிலோ பெரிய வெங்காயம் 440 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. மேலும், கோழி இறைச்சியின் விலையும் சந்தையில் வேகமாக அதிகரித்துள்ளது. எதிர்வரும் வாரங்களில் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்றும் முட்டைகள் 55 ரூபாவுக்கு மேல் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.இறக்குமதி செய்யப்பட்ட 6 மில்லியன் முட்டைகள் மக்கள் பாவனைக்கு இன்றும் (13) நாளையும் (14) சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், சதொச ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை கொள்வனவு செய்ய வாய்ப்பு உள்ளதாக அதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.