• Jan 21 2025

என் மீதான பயணத்தடை; பின்னணியில் சுமந்திரனின் சூழ்ச்சி! விசாரணை நடத்துமாறு சிறீதரன் எம்.பி. கோரிக்கை

Chithra / Jan 21st 2025, 12:14 pm
image


கனடாவில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புடன் கலந்துரையாடவே நான் சென்னை செல்ல இருந்ததாகவும், அதனாலேயே விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய பேட்டி தொடர்பில் விசாரணை நடத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் மேலும் கருத்த தெரிவித்த  சிறீதரன்,

மேற்குறித்த விடயம் தொடர்பில் சுமந்திரனை விசாரித்தால் இது தொடர்பான செய்திகள் எந்த ஊடகங்களில் வந்தது என்பதை அறிய முடியும்.

ஆனால் சுமந்திரனை நான் சென்னையில் கண்டபோதும் அவர் என்னிடம் இதுபற்றி எதுவும் கேட்கவில்லை.

இவ்வாறு விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது எனக்கு எதிராக நடத்தப்பட்ட திட்டமிட்ட சதியாகவே நான கருதுகிறேன்.

நீங்கள் சுமந்திரனை விசாரித்தால் இதற்குரிய உண்மையைக் கண்டறிய முடியும். எனக்கு எதிராக செய்யப்பட்ட மிகப்பெரிய சதியாக நான் கருதுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

என் மீதான பயணத்தடை; பின்னணியில் சுமந்திரனின் சூழ்ச்சி விசாரணை நடத்துமாறு சிறீதரன் எம்.பி. கோரிக்கை கனடாவில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புடன் கலந்துரையாடவே நான் சென்னை செல்ல இருந்ததாகவும், அதனாலேயே விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய பேட்டி தொடர்பில் விசாரணை நடத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்த தெரிவித்த  சிறீதரன்,மேற்குறித்த விடயம் தொடர்பில் சுமந்திரனை விசாரித்தால் இது தொடர்பான செய்திகள் எந்த ஊடகங்களில் வந்தது என்பதை அறிய முடியும்.ஆனால் சுமந்திரனை நான் சென்னையில் கண்டபோதும் அவர் என்னிடம் இதுபற்றி எதுவும் கேட்கவில்லை.இவ்வாறு விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது எனக்கு எதிராக நடத்தப்பட்ட திட்டமிட்ட சதியாகவே நான கருதுகிறேன்.நீங்கள் சுமந்திரனை விசாரித்தால் இதற்குரிய உண்மையைக் கண்டறிய முடியும். எனக்கு எதிராக செய்யப்பட்ட மிகப்பெரிய சதியாக நான் கருதுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement