• Oct 02 2024

இரண்டு பிரதான நிறுவனங்களும் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில்! – மொட்டு எம்.பி. வெளியிட்ட தகவல் SamugamMedia

Chithra / Mar 20th 2023, 6:45 pm
image

Advertisement

இலங்கையில் அதிகாரப் பரவலாக்கத்திற்காக ஸ்தாபிக்கப்பட்ட இரண்டு பிரதான நிறுவனங்களும் இன்று முதல் மறைமுகமாக ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது.

ஜனநாயகத்தை மதிக்கும் எவராலும் இந்த நிலைமை ஏற்றுக்கொள்ள முடியாதது என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பத்தரமுல்லயில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மக்களின் அன்றாட விவகாரங்கள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் தலையிடும் அதிகாரத்தின் மிகச்சிறிய அலகு உள்ளூராட்சி மன்றம் என்றும் மற்றயது மாகாண சபை என்றும் குறிப்பிட்டார்.

மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளை கட்டுப்படுத்துவதற்காக உள்ளூராட்சி நிறுவனங்கள் உருவாக்கப்பட்ட போதிலும் நேற்று முதல் இந்நிலைமை மாறியுள்ளதாக தெரிவித்தார்.

இரண்டு பிரதான நிறுவனங்களும் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் – மொட்டு எம்.பி. வெளியிட்ட தகவல் SamugamMedia இலங்கையில் அதிகாரப் பரவலாக்கத்திற்காக ஸ்தாபிக்கப்பட்ட இரண்டு பிரதான நிறுவனங்களும் இன்று முதல் மறைமுகமாக ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது.ஜனநாயகத்தை மதிக்கும் எவராலும் இந்த நிலைமை ஏற்றுக்கொள்ள முடியாதது என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.பத்தரமுல்லயில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.மக்களின் அன்றாட விவகாரங்கள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் தலையிடும் அதிகாரத்தின் மிகச்சிறிய அலகு உள்ளூராட்சி மன்றம் என்றும் மற்றயது மாகாண சபை என்றும் குறிப்பிட்டார்.மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளை கட்டுப்படுத்துவதற்காக உள்ளூராட்சி நிறுவனங்கள் உருவாக்கப்பட்ட போதிலும் நேற்று முதல் இந்நிலைமை மாறியுள்ளதாக தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement