• Oct 01 2024

செல்லையா குகதாசன் மறைவு - வலி.கிழக்கு பிரதேசசபை அமர்வில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை! SamugamMedia

Chithra / Mar 20th 2023, 6:30 pm
image

Advertisement

வலி கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் செயலாளர் செல்லையா குகதாசன் அவர்களின் மறைவுக்கு

அனுதாபம் செலுத்தும் பிரேரணை வலி கிழக்கு பிரதேசசபை அமர்வில் நிறைவேற்றப்பட்டது.

கோப்பாய் பிரதேசசபையின் மாதாந்த அமர்வு கடந்த வியாழக்கிழமை சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதன் போதே குறித்த அனுதாப பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

சபையின் வழமையான  செயற்பாடுகள் நிறைவுற்ற பின்னர் அமரத்துவமடைந்த வலி கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் செயலாளர் செல்லையா குகதாசன் அவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை பிரதேசசபை உறுப்பினர் ஸ்ரீதயாளண்டேஸ்வரன்  அவர்களால் முன்மொழியப்பட பிரதேசசபை உறுப்பினர் நடேசபிள்ளை கஜேந்திரகுமார் அவர்கள் அதனை வழிமொழிந்து குகதாசன் அவர்ஆற்றிய  உயர்அரசசேவைகள் தொடர்பிலும், சமய சமூக சேவைகள் தொடர்பிலும் அனுதாப உரையாற்றியிருந்தார்.

ஏனைய சபை உறுப்பினர்களும் அவரது கடந்தகாலசேவைகள் தொடர்பில் நினைவுகூர்ந்ததுடன் அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தனர்.

செல்லையா குகதாசன் மறைவு - வலி.கிழக்கு பிரதேசசபை அமர்வில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை SamugamMedia வலி கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் செயலாளர் செல்லையா குகதாசன் அவர்களின் மறைவுக்குஅனுதாபம் செலுத்தும் பிரேரணை வலி கிழக்கு பிரதேசசபை அமர்வில் நிறைவேற்றப்பட்டது.கோப்பாய் பிரதேசசபையின் மாதாந்த அமர்வு கடந்த வியாழக்கிழமை சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இதன் போதே குறித்த அனுதாப பிரேரணை நிறைவேற்றப்பட்டது.சபையின் வழமையான  செயற்பாடுகள் நிறைவுற்ற பின்னர் அமரத்துவமடைந்த வலி கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் செயலாளர் செல்லையா குகதாசன் அவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை பிரதேசசபை உறுப்பினர் ஸ்ரீதயாளண்டேஸ்வரன்  அவர்களால் முன்மொழியப்பட பிரதேசசபை உறுப்பினர் நடேசபிள்ளை கஜேந்திரகுமார் அவர்கள் அதனை வழிமொழிந்து குகதாசன் அவர்ஆற்றிய  உயர்அரசசேவைகள் தொடர்பிலும், சமய சமூக சேவைகள் தொடர்பிலும் அனுதாப உரையாற்றியிருந்தார்.ஏனைய சபை உறுப்பினர்களும் அவரது கடந்தகாலசேவைகள் தொடர்பில் நினைவுகூர்ந்ததுடன் அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement