• May 20 2024

போராட்டத்தில் குதித்த மின்சார சபையின் தொழிற்சங்கங்கள்! அதிரடி அறிவிப்பு வெளியானது SamugamMedia

Chithra / Feb 25th 2023, 10:55 am
image

Advertisement

அரசாங்கத்தின் தற்போதைய வரிக்கொள்கை, மேலதிக கொடுப்பனவை குறைத்தல் உள்ளிட்ட சில விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபையின் சில தொழிற்சங்கங்கள், எதிர்வரும் திங்கட்கிழமை (27) சுகயீன விடுமுறையை அறிக்கையிட்டு தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

சுமார் 12 இற்கும் அதிகமான தொழிற்சங்கங்கள், இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை பொறியிலாளர் மற்றும் சட்டத்துறை சங்கத்தின் இணைப்பாளர் நந்தன உதய குமார தெரிவித்திருந்தார்.

நாடளாவிய ரீதியாக தமது தொழிற்சங்க பிரதிநிதிகள், எதிர்வரும் 27 ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிக்கையிட்டு, கொழும்புக்கு வந்து, இலங்கை மின்சார சபையின் பிரதான காரியாலயம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.


மேலும், சுகாதார தொழிற்சங்கங்களுக்கு இடையிலான சந்திப்பபொன்றும் இன்று (25) இடம்பெறவுள்ளதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற உள்ளது.


போராட்டத்தில் குதித்த மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் அதிரடி அறிவிப்பு வெளியானது SamugamMedia அரசாங்கத்தின் தற்போதைய வரிக்கொள்கை, மேலதிக கொடுப்பனவை குறைத்தல் உள்ளிட்ட சில விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபையின் சில தொழிற்சங்கங்கள், எதிர்வரும் திங்கட்கிழமை (27) சுகயீன விடுமுறையை அறிக்கையிட்டு தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.சுமார் 12 இற்கும் அதிகமான தொழிற்சங்கங்கள், இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை பொறியிலாளர் மற்றும் சட்டத்துறை சங்கத்தின் இணைப்பாளர் நந்தன உதய குமார தெரிவித்திருந்தார்.நாடளாவிய ரீதியாக தமது தொழிற்சங்க பிரதிநிதிகள், எதிர்வரும் 27 ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிக்கையிட்டு, கொழும்புக்கு வந்து, இலங்கை மின்சார சபையின் பிரதான காரியாலயம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.மேலும், சுகாதார தொழிற்சங்கங்களுக்கு இடையிலான சந்திப்பபொன்றும் இன்று (25) இடம்பெறவுள்ளதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்திருந்தார்.எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement