• Nov 19 2024

உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளரின் வாக்குகள் நிராகரிக்கப்படும்! - தேர்தல் ஆணைக்குழு

Chithra / Sep 18th 2024, 11:45 am
image

 

உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளரான அய்துரூஸ் முஹம்மது இல்யாஸின் வாக்குகள் நிராகரிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழு இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் எம்.பி. வைத்தியர் அய்துரூஸ் முஹம்மது இல்யாஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி காலமானார்.

இதனையடுத்து, உயிரிழந்த அய்துரூஸ் முஹம்மது இல்யாஸை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்த கே.எம்.என் சஞ்சய சம்பத் ரோமனுக்கு வேறோரு ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அவர் புதியதொரு ஜனாதிபதி வேட்பாளர் நியமிக்கவில்லை.

இந்நிலையில், வாக்குச் சீட்டு மற்றும் வாக்கெடுப்புக்குரிய அனைத்து ஆவணங்களிலும் இறப்பெய்திய ஜனாதிபதி வேப்பாளரின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருப்பினும், வாக்குச் சீட்டுகளில் காணப்படும் உயிரிழந்த ஜனாதிபதி வேப்பாளரின் பெயருக்கு வாக்களிக்கப்பட்டால் அந்த வாக்கு நிராகரிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.


உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளரின் வாக்குகள் நிராகரிக்கப்படும் - தேர்தல் ஆணைக்குழு  உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளரான அய்துரூஸ் முஹம்மது இல்யாஸின் வாக்குகள் நிராகரிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.தேர்தல் ஆணைக்குழு இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் எம்.பி. வைத்தியர் அய்துரூஸ் முஹம்மது இல்யாஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி காலமானார்.இதனையடுத்து, உயிரிழந்த அய்துரூஸ் முஹம்மது இல்யாஸை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்த கே.எம்.என் சஞ்சய சம்பத் ரோமனுக்கு வேறோரு ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், அவர் புதியதொரு ஜனாதிபதி வேட்பாளர் நியமிக்கவில்லை.இந்நிலையில், வாக்குச் சீட்டு மற்றும் வாக்கெடுப்புக்குரிய அனைத்து ஆவணங்களிலும் இறப்பெய்திய ஜனாதிபதி வேப்பாளரின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருப்பினும், வாக்குச் சீட்டுகளில் காணப்படும் உயிரிழந்த ஜனாதிபதி வேப்பாளரின் பெயருக்கு வாக்களிக்கப்பட்டால் அந்த வாக்கு நிராகரிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement