• Nov 26 2024

மலையக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைவு...!

Sharmi / Mar 14th 2024, 11:32 am
image

மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பமான வானிலை காரணமாக நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

குறிப்பாக மவுஸ்சாக்கலை, கென்யோன், லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய, கலுகல, விமலசுரேந்திர, மேல் கொத்மலை, காசல்ரீ ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

அத்துடன் மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 23அடி குறைந்துள்ளது.

காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 22 அடி குறைந்துள்ளது.

இந்த காலநிலை தொடர்ந்தால் இப் பகுதியில் பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சாமிமலை ஓயா, காட்மோர் ஓயா,மறே ஓயா, சியத்த கங்குல ஓயா, மற்றும் ஏனைய சிற்றாறுகள், கெசல்கமு ஓயா, மகாவலி கங்கை உள்ளிட்ட அனைத்து ஆறுகளில் தற்போது மிக மிக குறைந்த நீர்வரத்து  காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



மலையக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைவு. மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பமான வானிலை காரணமாக நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.குறிப்பாக மவுஸ்சாக்கலை, கென்யோன், லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய, கலுகல, விமலசுரேந்திர, மேல் கொத்மலை, காசல்ரீ ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.அத்துடன் மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 23அடி குறைந்துள்ளது.காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 22 அடி குறைந்துள்ளது.இந்த காலநிலை தொடர்ந்தால் இப் பகுதியில் பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை சாமிமலை ஓயா, காட்மோர் ஓயா,மறே ஓயா, சியத்த கங்குல ஓயா, மற்றும் ஏனைய சிற்றாறுகள், கெசல்கமு ஓயா, மகாவலி கங்கை உள்ளிட்ட அனைத்து ஆறுகளில் தற்போது மிக மிக குறைந்த நீர்வரத்து  காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement