• Nov 24 2024

இலங்கை, இந்திய அரசுகளுக்கு சாதகமாக மாறியுள்ள தமிழர் தரப்பின் பலவீனம்! சபா குகதாஸ் கருத்து

Chithra / Jun 21st 2024, 6:02 pm
image

தமிழர் தரப்பின் பலவீனம் இலங்கை இந்திய அரசுகளுக்கு சாதகமாக மாறியுள்ளதாக வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மூன்றாவது முறை பதவி ஏற்றுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் அயலுறவுத்துறை அமைச்சர் கலாநிதி ஐெயசங்கர் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்து பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடிள்ளார்.

இதில் தமிழர் தரப்புடனான சந்திப்பு தமிழ் மக்கள் எதிர்பார்த்தது போன்று ஆரோக்கியமாக அமையவில்லை.

 மாறாக ஐெயசங்கர் உடனான சந்திப்பில் ஒற்றுமையான நிலைப்பாட்டை கூட்டாக ஒரு தீர்மானமாக தெரிவிக்க தவறியதுடன் ஐெய்சங்கர் முன்னிலையில் ஒரே கட்சிக்காரர் முரண்பட்ட கருத்து விவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அதேபோன்று பிரிதொரு கட்சியினர் 13 வது திருத்தம் மற்றும் மாகாணசபைத் தேர்தல் தேவையில்லை என்ற கருத்தையும் தெரிவித்தனர்.

இலங்கையின் சிங்கள ஆட்சியாளரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க பல்வேறு வியூகங்களை வகுக்கும் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு தமிழர் தரப்பின் பலவீனம் வாய்ப்பாகவும் இரண்டாம் தரப்பின் நெருக்கடிகள் இன்றி இலங்கை அரசை நேரடியாக கையாள வழி சமைத்துள்ளது.

சம நேரத்தில் இந்திய அரசின் ஆதரவுடன் அழுத்தங்களை எதிர்பார்க்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழர் தரப்பின் நெருக்கடிகள் இல்லை என்ற நிலையும் உறுதியாகியுள்ளது.

கடந்த கால தமிழர் தரப்பின் இராஐதந்திர பலவீனத்தை கற்றுக் கொண்ட பாடமாக விளங்கி  இலங்கை, இந்திய தரப்புக்களை தந்திரோபாய ரீதியில்  கையாள தமிழர் பிரதிநிதிகள் ஒற்றுமையின்மையால் பலவீனப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலைமை எதிர்காலத்தில் எஞ்சி உள்ள தமிழர் இருப்புக்களை அழித்துவிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை, இந்திய அரசுகளுக்கு சாதகமாக மாறியுள்ள தமிழர் தரப்பின் பலவீனம் சபா குகதாஸ் கருத்து தமிழர் தரப்பின் பலவீனம் இலங்கை இந்திய அரசுகளுக்கு சாதகமாக மாறியுள்ளதாக வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் மூன்றாவது முறை பதவி ஏற்றுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் அயலுறவுத்துறை அமைச்சர் கலாநிதி ஐெயசங்கர் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்து பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடிள்ளார்.இதில் தமிழர் தரப்புடனான சந்திப்பு தமிழ் மக்கள் எதிர்பார்த்தது போன்று ஆரோக்கியமாக அமையவில்லை. மாறாக ஐெயசங்கர் உடனான சந்திப்பில் ஒற்றுமையான நிலைப்பாட்டை கூட்டாக ஒரு தீர்மானமாக தெரிவிக்க தவறியதுடன் ஐெய்சங்கர் முன்னிலையில் ஒரே கட்சிக்காரர் முரண்பட்ட கருத்து விவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.அதேபோன்று பிரிதொரு கட்சியினர் 13 வது திருத்தம் மற்றும் மாகாணசபைத் தேர்தல் தேவையில்லை என்ற கருத்தையும் தெரிவித்தனர்.இலங்கையின் சிங்கள ஆட்சியாளரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க பல்வேறு வியூகங்களை வகுக்கும் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு தமிழர் தரப்பின் பலவீனம் வாய்ப்பாகவும் இரண்டாம் தரப்பின் நெருக்கடிகள் இன்றி இலங்கை அரசை நேரடியாக கையாள வழி சமைத்துள்ளது.சம நேரத்தில் இந்திய அரசின் ஆதரவுடன் அழுத்தங்களை எதிர்பார்க்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழர் தரப்பின் நெருக்கடிகள் இல்லை என்ற நிலையும் உறுதியாகியுள்ளது.கடந்த கால தமிழர் தரப்பின் இராஐதந்திர பலவீனத்தை கற்றுக் கொண்ட பாடமாக விளங்கி  இலங்கை, இந்திய தரப்புக்களை தந்திரோபாய ரீதியில்  கையாள தமிழர் பிரதிநிதிகள் ஒற்றுமையின்மையால் பலவீனப்பட்டுள்ளனர்.இவ்வாறான நிலைமை எதிர்காலத்தில் எஞ்சி உள்ள தமிழர் இருப்புக்களை அழித்துவிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement