• Nov 26 2024

கிளிநொச்சியில் முச்சக்கரவண்டியை நடமாடும் நூலகமாக மாற்றிய பெண்மணி...! குவியும் பாராட்டுக்கள்...!samugammedia

Sharmi / Dec 11th 2023, 2:29 pm
image

கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்களின் நலன்கருதி நடமாடும் நூலக சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சிங்கப்பூரில் வசிக்கும் புலம்பெயர் தமிழ்ப் பெண் ஒருவரின் நிதி அனுசரணையில் பாடசாலை மாணவர்களுக்காக முச்சக்கர வண்டியொன்றில்  நடமாடும் நூலகமொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நடமாடும் நூலக சேவையானது தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் தனது சேவையை மேற்கொண்டுள்ளது.

அதனடிப்படையில் மாதாந்தம் கிளிநொச்சியிலுள்ள இருபது வரையான பாடசாலைகளுக்கு இந்த நடமாடும் நூலக நூலக சேவை இடம்பெறுகின்றது.

இந்நிலையில் நடமாடும் நூலகத்தில் பாடசாலை மாணவர்கள் தமக்கு தேவையான நூல்களை பெற்று வாசித்து வருவதுடன் பாடசாலை சமூகமும் இதனால் பயனடைகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

'ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன' என்ற கூற்றுக்கிணங்க தற்கால மாணவ சமூகத்தின் தேவையறிந்து குறித்த நடமாடும் நூலகத்தை  ஆரம்பித்த சிங்கப்பூரிலுள்ள தமிழ்ப் பெண்ணின் சேவைக்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கிளிநொச்சியில் முச்சக்கரவண்டியை நடமாடும் நூலகமாக மாற்றிய பெண்மணி. குவியும் பாராட்டுக்கள்.samugammedia கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்களின் நலன்கருதி நடமாடும் நூலக சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சிங்கப்பூரில் வசிக்கும் புலம்பெயர் தமிழ்ப் பெண் ஒருவரின் நிதி அனுசரணையில் பாடசாலை மாணவர்களுக்காக முச்சக்கர வண்டியொன்றில்  நடமாடும் நூலகமொன்று அமைக்கப்பட்டுள்ளது.இந்த நடமாடும் நூலக சேவையானது தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் தனது சேவையை மேற்கொண்டுள்ளது.அதனடிப்படையில் மாதாந்தம் கிளிநொச்சியிலுள்ள இருபது வரையான பாடசாலைகளுக்கு இந்த நடமாடும் நூலக நூலக சேவை இடம்பெறுகின்றது.இந்நிலையில் நடமாடும் நூலகத்தில் பாடசாலை மாணவர்கள் தமக்கு தேவையான நூல்களை பெற்று வாசித்து வருவதுடன் பாடசாலை சமூகமும் இதனால் பயனடைகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.'ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன' என்ற கூற்றுக்கிணங்க தற்கால மாணவ சமூகத்தின் தேவையறிந்து குறித்த நடமாடும் நூலகத்தை  ஆரம்பித்த சிங்கப்பூரிலுள்ள தமிழ்ப் பெண்ணின் சேவைக்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement