• Apr 18 2026

யாழை குளிரவைத்த இளைஞர்கள் சிக்னலில் காத்திருப்போருக்கு நிழல் - வைரலாகும் மனிதநேயம்!

shanu / Apr 18th 2026, 12:13 pm
image


யாழில் சமிஞ்ஞை விளக்குகளில் காத்திருப்போருக்கு நிழல் அளிக்கும் வகையில் இளைஞர்கள் மேற்கொண்ட செயல் தற்போது வைரலாகி வருகின்றது. 


நாட்டில் அதிகரித்து வரும் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். 


அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாமலும் வெளியில் நடமாட முடியாமல் வெப்பத்தின் கொடூரம் மக்களை வாட்டி எடுக்கின்றது. 


வெப்பத்தின் கொடூரத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள பல வைத்திய நிபுணர்கள் பலவாறான கருத்துக்களையும் சிகிச்சை வழிமுறைகளையும் வழங்கி வருகின்றனர். 


தற்போது அதிகமாக  போக்குவரத்து மேற்கொள்பவர்களே அதிகம் வெப்பத்தில் சிக்கி அல்லோலப்படுகின்றனர். 


அதிலும் போக்குவரத்து சமிஞ்ஞை விளக்குகளில் காத்திருப்போர் வெப்பத்தைத் தாங்க முடியாமல் பெரும் அவஸ்தைப்படுகின்றனர். 


இந்த நிலையில் தான் சமிஞ்ஞை விளக்குகளில் காத்திருப்போரின் வெப்பத்தைத் தணிக்க யாழில் இளைஞர்கள் செய்த செயல் அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. 


சாக்கு படல்கள் பலவற்றைக் கொண்டு  சமிஞ்ஞை விளக்குகளில் காத்திருப்போருக்கு நிழல் தரக்கூடிய வகையில் மேலே இணைத்துக் கட்டியுள்ளனர். பல இளைஞர்கள் இணைந்து இரவுப் பொழுதில் குறித்த செயலை மேற்கொண்டனர். 


இளைஞர்களின் இந்த சமூக செயல் பலரது பாராட்டையும் பெற்று வைரலாகி வருகின்றது.  


யாழை குளிரவைத்த இளைஞர்கள் சிக்னலில் காத்திருப்போருக்கு நிழல் - வைரலாகும் மனிதநேயம் யாழில் சமிஞ்ஞை விளக்குகளில் காத்திருப்போருக்கு நிழல் அளிக்கும் வகையில் இளைஞர்கள் மேற்கொண்ட செயல் தற்போது வைரலாகி வருகின்றது. நாட்டில் அதிகரித்து வரும் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாமலும் வெளியில் நடமாட முடியாமல் வெப்பத்தின் கொடூரம் மக்களை வாட்டி எடுக்கின்றது. வெப்பத்தின் கொடூரத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள பல வைத்திய நிபுணர்கள் பலவாறான கருத்துக்களையும் சிகிச்சை வழிமுறைகளையும் வழங்கி வருகின்றனர். தற்போது அதிகமாக  போக்குவரத்து மேற்கொள்பவர்களே அதிகம் வெப்பத்தில் சிக்கி அல்லோலப்படுகின்றனர். அதிலும் போக்குவரத்து சமிஞ்ஞை விளக்குகளில் காத்திருப்போர் வெப்பத்தைத் தாங்க முடியாமல் பெரும் அவஸ்தைப்படுகின்றனர். இந்த நிலையில் தான் சமிஞ்ஞை விளக்குகளில் காத்திருப்போரின் வெப்பத்தைத் தணிக்க யாழில் இளைஞர்கள் செய்த செயல் அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. சாக்கு படல்கள் பலவற்றைக் கொண்டு  சமிஞ்ஞை விளக்குகளில் காத்திருப்போருக்கு நிழல் தரக்கூடிய வகையில் மேலே இணைத்துக் கட்டியுள்ளனர். பல இளைஞர்கள் இணைந்து இரவுப் பொழுதில் குறித்த செயலை மேற்கொண்டனர். இளைஞர்களின் இந்த சமூக செயல் பலரது பாராட்டையும் பெற்று வைரலாகி வருகின்றது.  

Advertisement

Advertisement

Advertisement