• Apr 08 2025

மஹிந்தவின் வீட்டில் திருட்டு! - பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

Chithra / Nov 24th 2024, 11:07 am
image

 

முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் அம்பலாங்கொடையில் உள்ள வீட்டில் சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இது தொடர்பாக மஹிந்த தேசப்பிரியவின் மனைவி அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.  

இரண்டு எரிவாயு கொள்கலன்கள், ஒரு தொலைக்காட்சி, இரண்டு தங்க நகைகள் மற்றும் நான்கு கைக்கடிகாரங்கள் என்பன திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

தற்போது கொழும்பில் வசித்துவரும் மஹிந்த தேசப்பிரியவும் அவரது மனைவியும் நேற்றைய தினம் அம்பலாங்கொடையிலுள்ள தங்களது வீட்டிற்குச் சென்றிருந்தபோது, இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.

மஹிந்தவின் வீட்டில் திருட்டு - பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் அம்பலாங்கொடையில் உள்ள வீட்டில் சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக மஹிந்த தேசப்பிரியவின் மனைவி அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.  இரண்டு எரிவாயு கொள்கலன்கள், ஒரு தொலைக்காட்சி, இரண்டு தங்க நகைகள் மற்றும் நான்கு கைக்கடிகாரங்கள் என்பன திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது கொழும்பில் வசித்துவரும் மஹிந்த தேசப்பிரியவும் அவரது மனைவியும் நேற்றைய தினம் அம்பலாங்கொடையிலுள்ள தங்களது வீட்டிற்குச் சென்றிருந்தபோது, இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now