• Apr 10 2025

அனைத்து தமிழ் தேசிய கட்சிகளையும் வழிநடத்த சிறீதரன் எம்.பி.க்கு தென் கையிலை ஆதீன முதல்வர் வாழ்த்து!

Chithra / Jan 21st 2024, 5:48 pm
image

 

தமிழரசுக் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறிதரன், அனைத்து தமிழ் தேசிய கட்சிகளையும் ஒருங்கிணைத்த ரீதியில் சிறந்ததொரு தமிழ் தேசிய பயணத்தை வழிநடத்த வேண்டும் என  ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் தென் கையிலை ஆதீன முதல்வருமான தவத்திரு அகத்தியர் அடிகளார் வேண்டுகோள் விடுத்ததுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இது தொடர்பில் தென் கையிலை ஆதீன முதல்வருமான தவத்திரு அகத்தியர் அடிகளார் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,தமிழரின் முதுபெரும் தமிழ்த்தேசிய பாரம்பரிய கட்சிகளில் ஒன்றான தமிழரசுக் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறிதரன் அவர்கள் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளையும் ஒருங்கணைத்த ரீதியில் சிறந்ததொரு தமிழ் தேசிய பயணத்தை வழிநடத்துவதற்கு ஆசியையையும் வாழ்த்தையும் தெரிவிக்கிறோம்.

இணைந்த வடகிழக்கு தாயகம் சுயநிர்ணயம் தேசியம் என்கின்ற பற்றுதியோடு எமக்கான இறுதி தீர்வை நோக்கி பிரயாணிக்கின்ற அதே நேரம் எம் மக்களின் இருப்பையும் அன்றாட அவலங்களையும் மனிதநேய வாழ்வாதார நெருக்கடிகளையும் சமநேரத்தில் கையாண்டு பயனுறுதிமிக்க தீர்வுகளை பெற்றுகொடுக்கும் பொறிமுறைகளை கண்டறிய தங்கள் தலைமைத்துவம் வழிவகுக்க வேண்டும்.

நிலத்திலும் புலத்திலும் அயலகத்திலும் உள்ள அனைத்து தமிழ் தேசிய சக்திகளுடனும் ஒருங்கிணைந்து சிறப்பான தமிழ் தேசிய வழிவரைபடத்துடன் தாங்கள் செயற்படுவதற்கு இறையாசி கிடைக்கட்டும்.

அண்மைய ஆண்டுகளில் தமிழர் தாயகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள மட்டு மயிலத்தமடு மேய்ச்சல் தரை, குருந்தூர் மலை, கல்முனை பிரதேச செயலகம் போன்ற விவகாரங்களில் தங்கள் விசேட கவனத்தை செலுத்தவும் இந்நேரத்தில் கேட்டு கொள்கின்றோம்.

எமது தாய் நிலத்தில் சுயநிர்ணயத்துடன் சுதேச பண்பாட்டுக் கோலங்களுடன் எம் தமிழ் மக்கள் நிலைபெற்று நிற்க தாங்கள் சார்ந்த கட்சியினூடான தங்கள் தலைமைத்துவம் வழிகோல ஒருகிணைந்த தமிழர் கட்டமைப்புச் சார்பாக உளமார வாழ்த்தி நிற்கின்றோம் – என்றுள்ளது.


அனைத்து தமிழ் தேசிய கட்சிகளையும் வழிநடத்த சிறீதரன் எம்.பி.க்கு தென் கையிலை ஆதீன முதல்வர் வாழ்த்து  தமிழரசுக் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறிதரன், அனைத்து தமிழ் தேசிய கட்சிகளையும் ஒருங்கிணைத்த ரீதியில் சிறந்ததொரு தமிழ் தேசிய பயணத்தை வழிநடத்த வேண்டும் என  ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் தென் கையிலை ஆதீன முதல்வருமான தவத்திரு அகத்தியர் அடிகளார் வேண்டுகோள் விடுத்ததுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.இது தொடர்பில் தென் கையிலை ஆதீன முதல்வருமான தவத்திரு அகத்தியர் அடிகளார் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில்,தமிழரின் முதுபெரும் தமிழ்த்தேசிய பாரம்பரிய கட்சிகளில் ஒன்றான தமிழரசுக் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறிதரன் அவர்கள் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளையும் ஒருங்கணைத்த ரீதியில் சிறந்ததொரு தமிழ் தேசிய பயணத்தை வழிநடத்துவதற்கு ஆசியையையும் வாழ்த்தையும் தெரிவிக்கிறோம்.இணைந்த வடகிழக்கு தாயகம் சுயநிர்ணயம் தேசியம் என்கின்ற பற்றுதியோடு எமக்கான இறுதி தீர்வை நோக்கி பிரயாணிக்கின்ற அதே நேரம் எம் மக்களின் இருப்பையும் அன்றாட அவலங்களையும் மனிதநேய வாழ்வாதார நெருக்கடிகளையும் சமநேரத்தில் கையாண்டு பயனுறுதிமிக்க தீர்வுகளை பெற்றுகொடுக்கும் பொறிமுறைகளை கண்டறிய தங்கள் தலைமைத்துவம் வழிவகுக்க வேண்டும்.நிலத்திலும் புலத்திலும் அயலகத்திலும் உள்ள அனைத்து தமிழ் தேசிய சக்திகளுடனும் ஒருங்கிணைந்து சிறப்பான தமிழ் தேசிய வழிவரைபடத்துடன் தாங்கள் செயற்படுவதற்கு இறையாசி கிடைக்கட்டும்.அண்மைய ஆண்டுகளில் தமிழர் தாயகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள மட்டு மயிலத்தமடு மேய்ச்சல் தரை, குருந்தூர் மலை, கல்முனை பிரதேச செயலகம் போன்ற விவகாரங்களில் தங்கள் விசேட கவனத்தை செலுத்தவும் இந்நேரத்தில் கேட்டு கொள்கின்றோம்.எமது தாய் நிலத்தில் சுயநிர்ணயத்துடன் சுதேச பண்பாட்டுக் கோலங்களுடன் எம் தமிழ் மக்கள் நிலைபெற்று நிற்க தாங்கள் சார்ந்த கட்சியினூடான தங்கள் தலைமைத்துவம் வழிகோல ஒருகிணைந்த தமிழர் கட்டமைப்புச் சார்பாக உளமார வாழ்த்தி நிற்கின்றோம் – என்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now