• May 05 2025

தேர்தல் கண்காணிப்புக்கு வெளிநாட்டுக் குழுக்கள் இல்லை; அரச மற்றும் தனியார் துறையினருக்கு வேதன குறைப்பின்றி விடுமுறை!

Chithra / May 4th 2025, 8:16 am
image


உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, எதிர்வரும் 6ஆம் திகதி அரச மற்றும் தனியார் துறையினருக்கு வேதன குறைப்பின்றி விடுமுறை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

அதேநேரம், பல்கலைக்கழகங்களின் பணிக்குழாமினருக்கும் மாணவர்களுக்கும் விடுமுறை வழங்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது. 

அத்துடன், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் பணிக்குழாமினருக்கும் மாணவர்களுக்கும் குறித்த தினத்தில் விடுமுறை வழங்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டுத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சர்வதேச ரீதியில் மிகவும் முக்கியமானது என கருதாமையின் காரணமாக வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். 

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றுக்கு ஐரோப்பிய ஒன்றியம், ஆசிய கண்காணிப்பு அமைப்பு உட்படக் கண்காணிப்புக்குழுக்கள் நாட்டுக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.


தேர்தல் கண்காணிப்புக்கு வெளிநாட்டுக் குழுக்கள் இல்லை; அரச மற்றும் தனியார் துறையினருக்கு வேதன குறைப்பின்றி விடுமுறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, எதிர்வரும் 6ஆம் திகதி அரச மற்றும் தனியார் துறையினருக்கு வேதன குறைப்பின்றி விடுமுறை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதேநேரம், பல்கலைக்கழகங்களின் பணிக்குழாமினருக்கும் மாணவர்களுக்கும் விடுமுறை வழங்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது. அத்துடன், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் பணிக்குழாமினருக்கும் மாணவர்களுக்கும் குறித்த தினத்தில் விடுமுறை வழங்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதேவேளை இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டுத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சர்வதேச ரீதியில் மிகவும் முக்கியமானது என கருதாமையின் காரணமாக வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றுக்கு ஐரோப்பிய ஒன்றியம், ஆசிய கண்காணிப்பு அமைப்பு உட்படக் கண்காணிப்புக்குழுக்கள் நாட்டுக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement