• Apr 15 2026

அமெரிக்காவிற்கு அஞ்சாத நாடுகளுக்கு தடை இல்லை; ஹோர்முஸ் நீரிணையை கடந்த சீன எரி​வாயு கப்​பல்!

shanu / Apr 15th 2026, 12:06 pm
image

அமெரிக்கா​வின் தடையை மீறி சீன எரி​வாயு கப்​பல் நேற்று ஹோர்முஸ் நீரிணையை கடந்து சென்​றுள்ளது. இது அமெரிக்கா​வுக்கு விடுக்​கப்​பட்ட சவாலாக கருதப்படுகின்றது.


ஈரானை ஒட்டி அமைந்​துள்ள ஹோர்முஸ் நீரிணை​யின் இரு முனை​களி​லும் சரக்​கு, எண்​ணெய் கப்​பல் போக்​குவரத்தை அமெரிக்க கடற்​படை முடக்கி உள்​ளது. 


இந்த சூழலில் அமெரிக்​கா​வின் தடையை மீறி சீனா​வின் ரிச்ஸ்டாரி என்ற எரி​வாயு கப்​பல் நேற்று ஹோர்முஸ் நீரிணையை கடந்​தது. ஐக்​கிய அரபு அமீரகத்​தின் துறைமுகத்​தில் இருந்து சீன கப்​பல் புறப்​பட்​ட​தாக தெரிவிக்கப்படுகின்றது. 


இந்த சீன கப்​பல் ஈரானில் இருந்து தொடர்ச்​சி​யாக எரிவாயுவை நிரப்​பிச் சென்​றது. இதன்​காரண​மாக அண்​மை​யில் ரிச் ஸ்டாரி கப்​பலுக்கு அமெரிக்க அரசு தடை விதித்​தது. 


ஆனால் அமெரிக்​கா​வின் தடையை மீறி அந்தக் கப்​பல் மேற்கு ஆசி​யா​வில் தொடர்ந்து இயக்​கப்​பட்டு வருகிறது. ரிச் ஸ்டாரி நேற்று ஹோர்முஸ் நீரிணையை கடந்​த​போது, கப்​பலின் கேப்டன் அமெரிக்க கடற்​படைக்கு முறைப்​படி தகவல் தெரி​வித்​துள்​ளார். 


அமெரிக்க அரசால் தடை விதிக்கப்​பட்ட கப்​பல் என்​ற​போ​தி​லும் அந்த கப்பல் தடுத்து நிறுத்​தப்​பட​வில்​லை. அமெரிக்கா​வுக்கு சவால் விடுக்​கும் வகை​யில் ஹோர்முஸ் நீரிணையை சீன கப்​பல் கடந்து சென்​றிருப்​ப​தாக சர்​வ​தேச பாது​காப்பு நிபுணர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.


இதுதொடர்​பாக கானா நாட்​டில் செயல்​படும் ஈரான் தூதரகம் சமூக வலைதளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறியிருப்​ப​தாவது: சீன கப்​பல் ஹோர்முஸ் நீரிணையை வெற்றிகர​மாக கடந்து சென்​றுள்​ளது. 


அமெரிக்கா​வின் மிகப்​பெரிய போர்க்​கப்​பல்​கள், சீன கப்​பலுக்கு தொடர்ந்து எச்​சரிக்கை விடுத்​துள்​ளன. ஆனால் சீன கப்​பலின் கேப்டன் எதை​யும் கண்டு​கொள்​ளாமல் ஹோர்முஸ் நீரிணையை நிதான​மாக கடந்து சென்றுள்​ளார்.


அமெரிக்கா​வுக்கு அஞ்​சும் நாடு​களுக்கு மட்​டுமே தடை விதிக்​கப்​பட்டு இருப்​ப​தாக​வும் அஞ்​சாத நாடு​களுக்கு தடை பொருந்​தாது என்​றும் சொல்லப்​படு​கின்றது. அமெரிக்கா​வுக்கு அஞ்​சாத நாடு​களின் பட்​டியல் மிக​வும் நீள​மாக இருக்​கிறது. இவ்​வாறு ஈரான்​ தூதரகம்​ கிண்டலடித்​துள்​ளது.


அமெரிக்காவிற்கு அஞ்சாத நாடுகளுக்கு தடை இல்லை; ஹோர்முஸ் நீரிணையை கடந்த சீன எரி​வாயு கப்​பல் அமெரிக்கா​வின் தடையை மீறி சீன எரி​வாயு கப்​பல் நேற்று ஹோர்முஸ் நீரிணையை கடந்து சென்​றுள்ளது. இது அமெரிக்கா​வுக்கு விடுக்​கப்​பட்ட சவாலாக கருதப்படுகின்றது.ஈரானை ஒட்டி அமைந்​துள்ள ஹோர்முஸ் நீரிணை​யின் இரு முனை​களி​லும் சரக்​கு, எண்​ணெய் கப்​பல் போக்​குவரத்தை அமெரிக்க கடற்​படை முடக்கி உள்​ளது. இந்த சூழலில் அமெரிக்​கா​வின் தடையை மீறி சீனா​வின் ரிச்ஸ்டாரி என்ற எரி​வாயு கப்​பல் நேற்று ஹோர்முஸ் நீரிணையை கடந்​தது. ஐக்​கிய அரபு அமீரகத்​தின் துறைமுகத்​தில் இருந்து சீன கப்​பல் புறப்​பட்​ட​தாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சீன கப்​பல் ஈரானில் இருந்து தொடர்ச்​சி​யாக எரிவாயுவை நிரப்​பிச் சென்​றது. இதன்​காரண​மாக அண்​மை​யில் ரிச் ஸ்டாரி கப்​பலுக்கு அமெரிக்க அரசு தடை விதித்​தது. ஆனால் அமெரிக்​கா​வின் தடையை மீறி அந்தக் கப்​பல் மேற்கு ஆசி​யா​வில் தொடர்ந்து இயக்​கப்​பட்டு வருகிறது. ரிச் ஸ்டாரி நேற்று ஹோர்முஸ் நீரிணையை கடந்​த​போது, கப்​பலின் கேப்டன் அமெரிக்க கடற்​படைக்கு முறைப்​படி தகவல் தெரி​வித்​துள்​ளார். அமெரிக்க அரசால் தடை விதிக்கப்​பட்ட கப்​பல் என்​ற​போ​தி​லும் அந்த கப்பல் தடுத்து நிறுத்​தப்​பட​வில்​லை. அமெரிக்கா​வுக்கு சவால் விடுக்​கும் வகை​யில் ஹோர்முஸ் நீரிணையை சீன கப்​பல் கடந்து சென்​றிருப்​ப​தாக சர்​வ​தேச பாது​காப்பு நிபுணர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.இதுதொடர்​பாக கானா நாட்​டில் செயல்​படும் ஈரான் தூதரகம் சமூக வலைதளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறியிருப்​ப​தாவது: சீன கப்​பல் ஹோர்முஸ் நீரிணையை வெற்றிகர​மாக கடந்து சென்​றுள்​ளது. அமெரிக்கா​வின் மிகப்​பெரிய போர்க்​கப்​பல்​கள், சீன கப்​பலுக்கு தொடர்ந்து எச்​சரிக்கை விடுத்​துள்​ளன. ஆனால் சீன கப்​பலின் கேப்டன் எதை​யும் கண்டு​கொள்​ளாமல் ஹோர்முஸ் நீரிணையை நிதான​மாக கடந்து சென்றுள்​ளார்.அமெரிக்கா​வுக்கு அஞ்​சும் நாடு​களுக்கு மட்​டுமே தடை விதிக்​கப்​பட்டு இருப்​ப​தாக​வும் அஞ்​சாத நாடு​களுக்கு தடை பொருந்​தாது என்​றும் சொல்லப்​படு​கின்றது. அமெரிக்கா​வுக்கு அஞ்​சாத நாடு​களின் பட்​டியல் மிக​வும் நீள​மாக இருக்​கிறது. இவ்​வாறு ஈரான்​ தூதரகம்​ கிண்டலடித்​துள்​ளது.

Advertisement

Advertisement

Advertisement