ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவுடன் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவிக்கையில்,
வேட்புமனு தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை.
அனுபவமற்ற ஜனாதிபதியை நியமித்து நாட்டை மீண்டும் ஆபத்தில் தள்ள முடியாது எனவும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பொருளாதார நெருக்கடியை தீர்த்து நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென தனிப்பட்ட முறையில் தாம் நம்புவதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
தம்பிக்கவுடன் எவ்வித டீலும் இல்லை. ஜனாதிபதியாக மீண்டும் ரணில். அமைச்சர் பிரசன்ன கருத்து.samugammedia ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவுடன் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.இது தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவிக்கையில்,வேட்புமனு தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை.அனுபவமற்ற ஜனாதிபதியை நியமித்து நாட்டை மீண்டும் ஆபத்தில் தள்ள முடியாது எனவும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பொருளாதார நெருக்கடியை தீர்த்து நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென தனிப்பட்ட முறையில் தாம் நம்புவதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.