• Nov 28 2024

தமிழரசுக் கட்சியின் தீர்மானம் தொடர்பில் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை- அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு..!

Sharmi / Sep 3rd 2024, 9:25 am
image

தமிழரசு கட்சியின் மத்திய குழு சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவிக்க முன்னரே  மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தீர்மானித்து விட்டதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

தமிழரசு மத்திய குழு சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்த கருத்து தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தமிழரசு கட்சியினுடைய தீர்மானம் தொடர்பில் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை அது அவர்களின் கட்சி சார்ந்த விடயம். 

நான் தேர்தல் திகதி ஆரம்பக்க முன்னரே ரணில் விக்கிரமசிங்க தான் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லக்கூடிய தலைவர் அவருக்கு எனது ஆதரவை வழங்கினேன். 

மக்கள் வரிசை யுகத்தில் பட்ட துன்பத்தை இன்னும் மறக்கவில்லை அதனை நீக்கிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க அதனையும் மக்கள் மறக்கவில்லை. 

தமிழரசு கட்சியை சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிக்க போவதாக அறிவிக்க முன்னரே மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்து விட்டார்கள். 

ஏனெனில் கடந்த கால அனுபவம் இதற்கு நல்ல உதாரணம்.  ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க விடாமல் தடுத்ததன் காரணமாக ஏற்பட்ட அழிவுகளை மக்கள் நன்கு உணர்ந்து இருப்பார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் தெற்கு மக்களாக இருந்தாலும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களாக இருந்தாலும்  தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே  ஆதரவு வழங்குவார்கள் .

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்கு பங்களிப்பு வழங்குகின்ற நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு வழங்கும் அதிகப்படியான வாக்குகள் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். 

மக்களின் ஆதரவு எனக்கு பலமடையும் சந்தர்ப்பங்களில் மக்களின் எதிர்பார்ப்புகளை  விரைவாகவும் சாணக்கியமாகவும் செய்து முடிப்பேன்.

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தில் நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவரும்  நிலையில் நாட்டை மீண்டும் பாதாள நிலைக்கு கொண்டு செல்ல நாட்டு மக்கள் தயாரில்லை.

ஆகவே, ஜனாதிபதி தேர்தலில்  தமிழரசு கட்சியின் தீர்மானம் ரணில் விக்கிரமசிங்கவையோ அல்லது தமிழ் மக்களையோ பாதிக்காது என அவர் மேலும் தெரிவித்தார். 


தமிழரசுக் கட்சியின் தீர்மானம் தொடர்பில் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை- அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு. தமிழரசு கட்சியின் மத்திய குழு சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவிக்க முன்னரே  மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தீர்மானித்து விட்டதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.தமிழரசு மத்திய குழு சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்த கருத்து தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழரசு கட்சியினுடைய தீர்மானம் தொடர்பில் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை அது அவர்களின் கட்சி சார்ந்த விடயம். நான் தேர்தல் திகதி ஆரம்பக்க முன்னரே ரணில் விக்கிரமசிங்க தான் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லக்கூடிய தலைவர் அவருக்கு எனது ஆதரவை வழங்கினேன். மக்கள் வரிசை யுகத்தில் பட்ட துன்பத்தை இன்னும் மறக்கவில்லை அதனை நீக்கிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க அதனையும் மக்கள் மறக்கவில்லை. தமிழரசு கட்சியை சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிக்க போவதாக அறிவிக்க முன்னரே மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்து விட்டார்கள். ஏனெனில் கடந்த கால அனுபவம் இதற்கு நல்ல உதாரணம்.  ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க விடாமல் தடுத்ததன் காரணமாக ஏற்பட்ட அழிவுகளை மக்கள் நன்கு உணர்ந்து இருப்பார்கள்.என்னைப் பொறுத்தவரையில் தெற்கு மக்களாக இருந்தாலும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களாக இருந்தாலும்  தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே  ஆதரவு வழங்குவார்கள் .ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்கு பங்களிப்பு வழங்குகின்ற நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு வழங்கும் அதிகப்படியான வாக்குகள் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். மக்களின் ஆதரவு எனக்கு பலமடையும் சந்தர்ப்பங்களில் மக்களின் எதிர்பார்ப்புகளை  விரைவாகவும் சாணக்கியமாகவும் செய்து முடிப்பேன்.ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தில் நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவரும்  நிலையில் நாட்டை மீண்டும் பாதாள நிலைக்கு கொண்டு செல்ல நாட்டு மக்கள் தயாரில்லை.ஆகவே, ஜனாதிபதி தேர்தலில்  தமிழரசு கட்சியின் தீர்மானம் ரணில் விக்கிரமசிங்கவையோ அல்லது தமிழ் மக்களையோ பாதிக்காது என அவர் மேலும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement