• Sep 29 2024

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை நீக்க வேண்டிய அவசியம் இல்லை! நீதி அமைச்சர் அறிவிப்பு samugammedia

Chithra / Oct 18th 2023, 11:52 am
image

Advertisement

 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டியத் தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இன்று சபையில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் தீர்மானத்தை தான் நாம் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளோம்.

ஆனால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்ய நாம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஊடகங்களில் தெரிவிக்கப்படுகிறது.

இது முற்றிலும் பொய்யான ஒரு விடயமாகும். எமக்கு அப்படி செய்ய வேண்டிய தேவையும் கிடையாது.

நாம் செய்ய முடியுமான செயற்பாடுகளை மட்டும்தான் செய்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை நீக்க வேண்டிய அவசியம் இல்லை நீதி அமைச்சர் அறிவிப்பு samugammedia  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டியத் தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இன்று சபையில் தெரிவித்தார்.எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் தீர்மானத்தை தான் நாம் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளோம்.ஆனால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்ய நாம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஊடகங்களில் தெரிவிக்கப்படுகிறது.இது முற்றிலும் பொய்யான ஒரு விடயமாகும். எமக்கு அப்படி செய்ய வேண்டிய தேவையும் கிடையாது.நாம் செய்ய முடியுமான செயற்பாடுகளை மட்டும்தான் செய்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement