ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்குவதாக யார் தெரிவித்தாலும்,
தற்போதுள்ள செயற்பாடடு அரசியலில் அதற்கு தகுதியானவர் ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு யாரும் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்தார்.
அத்துடன் ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும். அதற்காக அந்த கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்காது.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் நேற்று (31) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
நாடு வங்குராேத்து அடைந்தபோது நாட்டை பொறுப்பெற்க யாரும் முன்வரவில்லை. பல்வேறு காரணங்களை தெரிவித்துக்கொண்டு பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதில் இருந்து நலுவிச்சென்றவர்கள் தற்போது அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடப்போவதாக தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் நாடு வங்குராேத்து அடைந்தபோது, தனி நபராக இருந்துகொண்டு அந்த பொறுப்பை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டார்.
அதேபோன்று நாட்டை கட்டியெழுப்ப சில கஷ்டமான தீர்மானங்களை தைரியமாக முன்னெடுத்தார்.
அதன் காரணமாகவே நாட்டை வங்குராேத்து நிலைமையில் இருந்து மீட்டு, மக்கள் ஓரளவேனும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியுமாகி இருக்கிறது.
இவ்வாறான நிலையி்ல் அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்குவதற்கு தற்போதுள்ள அரசியல்வாதிகளில் ரணில் விக்ரமசிங்கவை தவிர தகுதியான வேறு யார் இருக்கிறார்
அத்துடன் ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராக களமிறங்கினால் அவருக்கு அனைத்து மக்களும் ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. என்றார்.
பொது வேட்பாளராக களமிறங்க ரணிலைத் தவிர வேறு தகுதியான எவரும் இல்லை - ஐ.தே.க. சூளுரை ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்குவதாக யார் தெரிவித்தாலும்,தற்போதுள்ள செயற்பாடடு அரசியலில் அதற்கு தகுதியானவர் ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு யாரும் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்தார்.அத்துடன் ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும். அதற்காக அந்த கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்காது. ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் நேற்று (31) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.நாடு வங்குராேத்து அடைந்தபோது நாட்டை பொறுப்பெற்க யாரும் முன்வரவில்லை. பல்வேறு காரணங்களை தெரிவித்துக்கொண்டு பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதில் இருந்து நலுவிச்சென்றவர்கள் தற்போது அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடப்போவதாக தெரிவித்து வருகின்றனர். ஆனால் நாடு வங்குராேத்து அடைந்தபோது, தனி நபராக இருந்துகொண்டு அந்த பொறுப்பை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டார்.அதேபோன்று நாட்டை கட்டியெழுப்ப சில கஷ்டமான தீர்மானங்களை தைரியமாக முன்னெடுத்தார். அதன் காரணமாகவே நாட்டை வங்குராேத்து நிலைமையில் இருந்து மீட்டு, மக்கள் ஓரளவேனும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியுமாகி இருக்கிறது.இவ்வாறான நிலையி்ல் அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்குவதற்கு தற்போதுள்ள அரசியல்வாதிகளில் ரணில் விக்ரமசிங்கவை தவிர தகுதியான வேறு யார் இருக்கிறார் அத்துடன் ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராக களமிறங்கினால் அவருக்கு அனைத்து மக்களும் ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. என்றார்.