• Jun 22 2024

சம்பள முரண்பாட்டிற்கு இதுவரை உரிய தீர்வில்லை...! யாழில் பல்கலை ஊழியர்கள் போராட்டம்...!

Sharmi / Jun 14th 2024, 1:49 pm
image

Advertisement

சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை  முன்வைத்து கடந்த 44 நாட்களாக தொடர் பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று(14)  கவனயீர்ப்பு போராட்டத்தை  முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டமானது இன்று காலை பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலிலுக்கு முன்பாக ஆரம்பமானது.

முதலில், யாழ்.பல்கலைக்கழக வளாகத்திலிருந்து பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் பேரணியாக வந்து பிரதான வாயிலில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

சம்பள முரண்பாடு, MCA கொடுப்பனவு அதிகரித்து வழங்குதல் போன்ற பல நீண்டகால பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கோசங்களை எழுப்பியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


சம்பள முரண்பாட்டிற்கு இதுவரை உரிய தீர்வில்லை. யாழில் பல்கலை ஊழியர்கள் போராட்டம். சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை  முன்வைத்து கடந்த 44 நாட்களாக தொடர் பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று(14)  கவனயீர்ப்பு போராட்டத்தை  முன்னெடுத்தனர்.குறித்த போராட்டமானது இன்று காலை பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலிலுக்கு முன்பாக ஆரம்பமானது.முதலில், யாழ்.பல்கலைக்கழக வளாகத்திலிருந்து பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் பேரணியாக வந்து பிரதான வாயிலில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.சம்பள முரண்பாடு, MCA கொடுப்பனவு அதிகரித்து வழங்குதல் போன்ற பல நீண்டகால பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கோசங்களை எழுப்பியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement