• Jun 22 2024

திருமலையில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்...! டிப்பர் வாகனம் மோதியதாக சந்தேகம்...!

Sharmi / Jun 14th 2024, 2:55 pm
image

Advertisement

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனையூர் மயிலிமலை கல்லுடைக்கும் பகுதியில் டிப்பர் வாகனம் மோதியதாக சந்தேகம் தெரிவிக்கப்பட்ட நிலையில் சேனையூர் 6ம் வட்டாரத்தைச் சேர்ந்த 21 வயதுடைய என்ற இளைஞன் உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் நேற்று (13) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் கருங்கற்களை ஏற்றிச் செல்கின்ற டிப்பர் வாகனமே குறித்த இளைஞன் மீது மோதியுள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஒரு டிப்பர் வாகனம் கைப்பற்றப்பட்டதுடன் அதன் சாரதி சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக சம்பூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை விபத்தில் உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்போது மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் மாற்றுத்திறனாளி என்பதுடன் உயிரிழந்தவரின் சகோதரரும் சில வருடங்களுக்கு முன்னர் விபத்தில் மரணமடைந்தாக சம்பூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



திருமலையில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம். டிப்பர் வாகனம் மோதியதாக சந்தேகம். திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனையூர் மயிலிமலை கல்லுடைக்கும் பகுதியில் டிப்பர் வாகனம் மோதியதாக சந்தேகம் தெரிவிக்கப்பட்ட நிலையில் சேனையூர் 6ம் வட்டாரத்தைச் சேர்ந்த 21 வயதுடைய என்ற இளைஞன் உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இச்சம்பவம் நேற்று (13) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த பகுதியில் கருங்கற்களை ஏற்றிச் செல்கின்ற டிப்பர் வாகனமே குறித்த இளைஞன் மீது மோதியுள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஒரு டிப்பர் வாகனம் கைப்பற்றப்பட்டதுடன் அதன் சாரதி சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக சம்பூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அதேவேளை விபத்தில் உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்போது மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் மாற்றுத்திறனாளி என்பதுடன் உயிரிழந்தவரின் சகோதரரும் சில வருடங்களுக்கு முன்னர் விபத்தில் மரணமடைந்தாக சம்பூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement