நாட்டில் எக்காரணம் கொண்டும் மின்சாரத் தடையை அமுல்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு
இல்லையென அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமை, செலவு குறைந்த மற்றும் நம்பகமான மின் உற்பத்தி ஆதாரங்கள் மூலம் தற்போதைய நிலைமை வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
2025-2026 ஆம் ஆண்டிற்கான நிலக்கரி கொள்வனவு செயன்முறையில் ஏற்பட்ட சில குறைபாடுகள் குறித்துப் பேசிய அமைச்சர், அதன் காரணமாக மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டால், அந்தச் சுமையை மக்கள் மீது சுமத்தப் போவதில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெளிவுபடுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து அமைச்சர் மேலும் விளக்கமளிக்கையில்:
நிலக்கரி விநியோகத்தில் தவறிழைத்த நிறுவனங்களிடமிருந்து உரிய அபராதத் தொகையை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு அறவிடப்படும் தொகை இழப்பிற்குப் போதுமானதாக இல்லையெனில், குறித்த நிறுவனங்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தத் தவறுகளால் ஏற்படும் நிதிச் சுமையை அரசாங்கத் திறைசேரியோ அல்லது பொதுமக்களோ ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என ஜனாதிபதியும் உறுதிப்படுத்தியுள்ளார்.
எந்தச் சூழலிலும் மின்சார விநியோகத்தைக் கட்டுப்படுத்தாமல், முறையான திட்டமிடல் மூலம் மின் தேவையைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.
நாட்டில் மின்சாரத் தடைக்கு இடமில்லை அமைச்சர் நளிந்த உறுதி நாட்டில் எக்காரணம் கொண்டும் மின்சாரத் தடையை அமுல்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லையென அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமை, செலவு குறைந்த மற்றும் நம்பகமான மின் உற்பத்தி ஆதாரங்கள் மூலம் தற்போதைய நிலைமை வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.2025-2026 ஆம் ஆண்டிற்கான நிலக்கரி கொள்வனவு செயன்முறையில் ஏற்பட்ட சில குறைபாடுகள் குறித்துப் பேசிய அமைச்சர், அதன் காரணமாக மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டால், அந்தச் சுமையை மக்கள் மீது சுமத்தப் போவதில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெளிவுபடுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.இது குறித்து அமைச்சர் மேலும் விளக்கமளிக்கையில்:நிலக்கரி விநியோகத்தில் தவறிழைத்த நிறுவனங்களிடமிருந்து உரிய அபராதத் தொகையை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு அறவிடப்படும் தொகை இழப்பிற்குப் போதுமானதாக இல்லையெனில், குறித்த நிறுவனங்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இந்தத் தவறுகளால் ஏற்படும் நிதிச் சுமையை அரசாங்கத் திறைசேரியோ அல்லது பொதுமக்களோ ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என ஜனாதிபதியும் உறுதிப்படுத்தியுள்ளார்.எந்தச் சூழலிலும் மின்சார விநியோகத்தைக் கட்டுப்படுத்தாமல், முறையான திட்டமிடல் மூலம் மின் தேவையைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.