• May 13 2026

யாழ்.போதனா வைத்தியசாலையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை! பணிப்பாளர் அறிவிப்பு

Chithra / May 12th 2026, 8:52 am
image

யாழ்.போதனா வைத்தியசாலையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் வைத்திய சேவை வழமை போல் நடைபெறுவதாகவும் மருந்துகள் தொடர்பி ல் மக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார்.


கடந்த ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருந்து களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் கொழும்பிலிருந்து வருகை தந்த  அரச பகுப்பாகத் திணைக்கள அதிகாரி நேற்று கள ஆய்வில் ஈடுபட்டார்.


இவர்களுக்கு உதவியாக யாழ்ப்பாண தடயவியல் பொலிசாரும் ஆய்வில் ஈடுபட்டனர்.


இந்த தீ விபத்து தொடர்பில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், 


இது தொடர்பில் உள்ளக விசாரணை இடம்பெறுகிறது. அதற்கு மேலதிகமாக பொலிசாரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.அத்துடன்  அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரியும் விசாரணையில் ஈடுபட்டார். விசாரணைகள் முடிவடைந்ததும் சேத விவரம் தொடர்பாக அறியமுடியும் என தெரிவித்தார். 


யாழ்.போதனா வைத்தியசாலையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை பணிப்பாளர் அறிவிப்பு யாழ்.போதனா வைத்தியசாலையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் வைத்திய சேவை வழமை போல் நடைபெறுவதாகவும் மருந்துகள் தொடர்பி ல் மக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார்.கடந்த ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருந்து களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் கொழும்பிலிருந்து வருகை தந்த  அரச பகுப்பாகத் திணைக்கள அதிகாரி நேற்று கள ஆய்வில் ஈடுபட்டார்.இவர்களுக்கு உதவியாக யாழ்ப்பாண தடயவியல் பொலிசாரும் ஆய்வில் ஈடுபட்டனர்.இந்த தீ விபத்து தொடர்பில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், இது தொடர்பில் உள்ளக விசாரணை இடம்பெறுகிறது. அதற்கு மேலதிகமாக பொலிசாரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.அத்துடன்  அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரியும் விசாரணையில் ஈடுபட்டார். விசாரணைகள் முடிவடைந்ததும் சேத விவரம் தொடர்பாக அறியமுடியும் என தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement