• Nov 28 2024

அரசாங்கத்துக்கு பெற்ற கடனை செலுத்த வழியில்லை...! சபையில் இராதாகிருஷ்ணன் எம்.பி காட்டம்...!

Sharmi / Mar 6th 2024, 10:47 am
image

வங்கிகளில் கடன் பெற்ற தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் கடன் பெற்றவர்களுக்கு அரசாங்கம் சலுகைகளை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்  வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம்(05) பாராளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

பராட்டே சட்டத்தின் கீழ் வங்கிகளில் கடன் பெற்று வியாபாரம் மேற்கொண்டுவந்த சிறிய மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் வியாபாரம் நட்டமடைந்துள்ளது.

எனவே, அவர்களால் வங்கிகளில் இருந்து பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால், அவர்களின் சொத்துக்களை வங்கி உடமையாக்கி, ஏலத்தில் விடும் நிலை ஏற்பட்டுள்ளதால் பல தொழிலாளர்களின் குடும்பங்கள் வீதிக்கு இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு பெற்ற கடனை செலுத்த வழியில்லை என்றால், சாதாரண மக்கள் வங்கிகளில் இருந்து பெற்றுக்கொண்ட கடனை எவ்வாறு செல்ல முடியும்? அதனால் சாதாரண மக்களுக்கும் இந்த கடனை செலுத்துவதற்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.



அரசாங்கத்துக்கு பெற்ற கடனை செலுத்த வழியில்லை. சபையில் இராதாகிருஷ்ணன் எம்.பி காட்டம். வங்கிகளில் கடன் பெற்ற தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் கடன் பெற்றவர்களுக்கு அரசாங்கம் சலுகைகளை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்  வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.நேற்றையதினம்(05) பாராளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், பராட்டே சட்டத்தின் கீழ் வங்கிகளில் கடன் பெற்று வியாபாரம் மேற்கொண்டுவந்த சிறிய மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் வியாபாரம் நட்டமடைந்துள்ளது.எனவே, அவர்களால் வங்கிகளில் இருந்து பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்களின் சொத்துக்களை வங்கி உடமையாக்கி, ஏலத்தில் விடும் நிலை ஏற்பட்டுள்ளதால் பல தொழிலாளர்களின் குடும்பங்கள் வீதிக்கு இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அரசாங்கத்துக்கு பெற்ற கடனை செலுத்த வழியில்லை என்றால், சாதாரண மக்கள் வங்கிகளில் இருந்து பெற்றுக்கொண்ட கடனை எவ்வாறு செல்ல முடியும் அதனால் சாதாரண மக்களுக்கும் இந்த கடனை செலுத்துவதற்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement