• Nov 26 2024

மே, 10ஆம் திகதிக்கு பின்னர் மாலைத்தீவில் இந்திய இராணுவ வீரா்கள் இருக்க மாட்டாா்கள்- முகமது மூயிஸ் அறிவிப்பு..!!

Tamil nila / Mar 8th 2024, 8:23 am
image

மே மாதம் 10ஆம் திகதிக்கு பின்னர் மாலைத்தீவில் இந்திய இராணுவ வீரா்கள் எவரும் இருக்க மாட்டாா்கள் என்று அந்நாட்டு ஜனாதிபதி முகமது மூயிஸ் தெரிவித்துள்ளாா்.

அதாவது மாலைத்தீவுக்கு மருத்துவ உதவி மற்றும் கடல்சாா் கண்காணிப்புக்காக இரண்டு அதிநவீன இலகுரக ஹெலிகாப்டா்கள், ஒரு டாா்னியா் சிறிய ரக விமானம் ஆகியவற்றை இந்தியா வழங்கியது.

மேலும் அவற்றை அந்நாட்டில் பராமரித்து, இயக்குவது உள்ளிட்ட பணிகளில் 88 இந்திய இராணுவ வீரா்கள் ஈடுபட்டுள்ளனா். அந்த வீரா்களை திரும்பப் பெறுமாறு, சீன ஆதரவாளரான மாலைத்தீவு ஜனாதிபதி மூயிஸ் இந்திய அரசிடம் வலியுறுத்தினாா்.

இதனால் இந்தியா, மாலைத்தீவு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. கடந்த பெப்ரவரி 2ஆம் திகதி புதுடில்லியில் இரு நாடுகளுக்கு இடையே உயா்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்துக்குப் பின்னா், மே 10ஆம் திகதிக்குள் மாலைத்தீவில் உள்ள இந்திய இராணுவ வீரா்கள் முற்றிலும் திரும்பப் பெறப்படுவாா்கள் எனவும், மாா்ச் 10க்குள் இந்திய வீரா்களின் முதல் குழு மாலைத்தீவில் இருந்து வெளியேறும் என்றும் மாலத்தீவு வெளியுறவுத் துறை தெரிவித்தது.

”மாலைத்தீவிலிருந்து வெளியேறுவதாக கூறும் இந்திய இராணுவ வீரா்கள் சாதாரண உடையில் திரும்பி வந்து பணியாற்றுவதாக கூறுகிறாா்கள்.

மக்களின் மனதில் சந்தேகம் எழும் வகையில் யாரும் நடந்து கொள்ளவோ பொய்களைப் பரப்பவோ கூடாது. ஆனால், எதிர்வரும் மே 10ஆம் திகதி முதல் இந்திய இராணுவ வீரா்கள் இங்கு இருக்க மாட்டாா்கள்.” என ஜனாதிபதி முகமது மூயிஸ் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.

மே, 10ஆம் திகதிக்கு பின்னர் மாலைத்தீவில் இந்திய இராணுவ வீரா்கள் இருக்க மாட்டாா்கள்- முகமது மூயிஸ் அறிவிப்பு. மே மாதம் 10ஆம் திகதிக்கு பின்னர் மாலைத்தீவில் இந்திய இராணுவ வீரா்கள் எவரும் இருக்க மாட்டாா்கள் என்று அந்நாட்டு ஜனாதிபதி முகமது மூயிஸ் தெரிவித்துள்ளாா்.அதாவது மாலைத்தீவுக்கு மருத்துவ உதவி மற்றும் கடல்சாா் கண்காணிப்புக்காக இரண்டு அதிநவீன இலகுரக ஹெலிகாப்டா்கள், ஒரு டாா்னியா் சிறிய ரக விமானம் ஆகியவற்றை இந்தியா வழங்கியது.மேலும் அவற்றை அந்நாட்டில் பராமரித்து, இயக்குவது உள்ளிட்ட பணிகளில் 88 இந்திய இராணுவ வீரா்கள் ஈடுபட்டுள்ளனா். அந்த வீரா்களை திரும்பப் பெறுமாறு, சீன ஆதரவாளரான மாலைத்தீவு ஜனாதிபதி மூயிஸ் இந்திய அரசிடம் வலியுறுத்தினாா்.இதனால் இந்தியா, மாலைத்தீவு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. கடந்த பெப்ரவரி 2ஆம் திகதி புதுடில்லியில் இரு நாடுகளுக்கு இடையே உயா்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது.அந்தக் கூட்டத்துக்குப் பின்னா், மே 10ஆம் திகதிக்குள் மாலைத்தீவில் உள்ள இந்திய இராணுவ வீரா்கள் முற்றிலும் திரும்பப் பெறப்படுவாா்கள் எனவும், மாா்ச் 10க்குள் இந்திய வீரா்களின் முதல் குழு மாலைத்தீவில் இருந்து வெளியேறும் என்றும் மாலத்தீவு வெளியுறவுத் துறை தெரிவித்தது.”மாலைத்தீவிலிருந்து வெளியேறுவதாக கூறும் இந்திய இராணுவ வீரா்கள் சாதாரண உடையில் திரும்பி வந்து பணியாற்றுவதாக கூறுகிறாா்கள்.மக்களின் மனதில் சந்தேகம் எழும் வகையில் யாரும் நடந்து கொள்ளவோ பொய்களைப் பரப்பவோ கூடாது. ஆனால், எதிர்வரும் மே 10ஆம் திகதி முதல் இந்திய இராணுவ வீரா்கள் இங்கு இருக்க மாட்டாா்கள்.” என ஜனாதிபதி முகமது மூயிஸ் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement